ஞானகுரு :
மானம், அவமானம், தன்மானம் போன்ற எல்லாமே கற்பனை. இதை வயதான காலத்தில் எல்லோரும் உணர்ந்துகொள்ளும் சூழல் வரும். இயலாமையில் அறிந்துகொள்ளும் இந்த ரகசியத்தை இளமையிலே கற்றுக் கொள்ளுங்கள். மேலும் எதிர்காலத்தில் என்ன நடகும் என்று யாருக்கும் தெரியாது. யாரை பழி வாங்கத் துடிக்கிறீர்களோ அவரிடமே போய் நிற்க வேண்டிய சூழலும் வரலாம். எனவே, எல்லாவற்றையும் மறந்துவிடாதீர்கள், ஆனால் மன்னியுங்கள்.
ஏனென்றால். பழி வாங்கும் உணர்வு என்பது துருப்பிடித்த ஆணி போன்றது. அதுவும் பயன்படாது, அருகில் இருப்பதையும் துருப்பிடிக்க வைத்துவிடும். மன்னிப்பதுதான் ஒருவருக்கு தரும் மிகப்பெரும் தண்டனை. அதையே கொடுத்துப் பழகுங்கள். வாழ்க்கை சுலபமாக நகர்ந்துவிடும்.
gyaanaguru.com Changed status to publish
