ஞானகுரு :
குறிப்பிட்ட இடத்தில் பார்க்கவேண்டிய நான்கு இடங்களையும் அவசரம் அவசரமாகப் பார்ப்பதன் பெயர் பயணம் அல்ல. புதிய மண், புதிய மக்கள், புதிய உணவு போன்ற மாற்றங்களை ஏற்று ரசிக்கும் மனம் வேண்டும். பயணத்திட்டம் போட்டு பயணம் செய்பவருக்கு காஷ்மீர் பனி மலைக்குச் சென்றாலும் ஆனந்தம் கிடைக்காது. பயணத்தை நன்கு அனுபவிக்கும் ஆசை இருந்தாலும் சின்னச்சின்ன மாற்றங்களை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். வழக்கமாகப் படுக்கும் கட்டிலில் தலை மாற்றி படுத்தால் கூட, அதில் ஒரு புதிய சுகம் காணும் மனநிலைக்கு வாருங்கள். எதையும் ரசிக்கும் மனப்பாங்கு உள்ளவருக்கு மட்டுமே பயணம் மனசுக்குள் மழை பொழியவைக்கும். மற்றவருக்கு ஒரு சினிமா பார்த்த அனுபவம் மட்டுமே மிஞ்சும்.
gyaanaguru.com Changed status to publish
