ஞானகுரு :
அனைத்து உயிரினங்களும் சந்ததியை உருவாக்குவதோடு தங்கள் பணியை முடித்துக்கொள்கின்றன. மனிதன் மட்டுமே அந்த சந்ததியின் எதிர்காலத்துக்கும் சேர்த்து உழைக்கிறான். இதில் தாய்மைக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கத்தான் செய்கிறது.
ஒரு நல்ல கணவன் கிடைத்திருக்கலாம், பணக்கார அப்பா கிடைத்திருக்கலாம், பாசமான தங்கை கிடைத்திருக்கலாம் என்று எல்லா உறவுகள் மீதும் கொஞ்சம் மனிதருக்கு அதிருப்தி தோன்றுவது இயல்பு. ஆனால், எந்த தாயும் இதை விட ஒரு நல்ல பிள்ளை தனக்குக் கிடைத்திருக்கலாம் என்று எண்ணுவதே இல்லை. எப்படிப்பட்ட பிள்ளையாக இருந்தாலும், அதனை வரமாக நினைக்கிறாள். எத்தனை தவறு செய்தாலும் பொறுத்துக்கொள்கிறாள். அதனால் தாய்மையை போற்றுவதில் எந்த தவறும் இல்லை.
gyaanaguru.com Changed status to publish
