Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : என் கணவர் என் மீது அதிக அன்பாக இருக்கிறார். அதேநேரம், நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கிறார். தங்கக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடப்பது போன்ற மனநிலையில் இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? – நீலவேணி, சென்னை.

217 viewsAugust 7, 2024
0
gyaanaguru.com August 7, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 7, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 7, 2024 0 Comments

ஞானகுரு :

உங்கள் மீது அவர் பாசம் காட்டவில்லை, உங்களை ஆடம்பரப் பொருளாகப்  பாவிக்கிறார். யாரேனும் திருடிவிடலாம் எனும் பயத்தில் இருக்கிறார். அதனால்தான் நிறையவே கட்டுப்பாடுகளை விதிக்கிறார்.

அன்பு செலுத்துபவர், அன்பு செலுத்தப்படுபவர் இருவரும் எவ்வித கட்டுப்பாடுகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான் உயர்வானது. தான் செய்யும் ஒரு செயல், தனக்கு நேசமானவர்களைப் புண்படுத்தும் என்று தெரிந்தும் கட்டுப்பாடுகள் விதிப்பவரை எப்படி அன்புமயமானவர் என்று ஏற்றுக்கொள்ள முடியும். நீங்கள்  என்ன செய்யவேண்டும்… எப்படி  நடந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்புகளுடன் கணவர் இருக்கிறார் என்றால், அவருக்குத் தேவை மனைவி அல்ல… சொன்னதைக் கேட்கும் பொம்மை.

உண்மையில்  அன்பு கட்டுப்பாடு அற்றது… சுதந்தரமானது… பயம் இல்லாதது என்பதை கணவருக்குப் புரிய வையுங்கள். தேவையெனில் சில அதிர்ச்சி வைத்தியமும் கொடுக்கலாம். எப்படியென்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

gyaanaguru.com Changed status to publish August 7, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US