ஞானகுரு :
தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது, தன்னால் நிச்சயம் தப்பிவிட முடியும் என்ற குருட்டு நம்பிக்கை இருப்பதாலே, அடுத்தவரிடமிருந்து அபகரிக்கிறார்கள். இந்த உலகில் வயிற்றுப் பசியினால் செத்துப்போனவர்கள்தான் அதிகம், பசிக்காக திருடுபவர்கள் யாரும் மீண்டும் மீண்டும் திருடுவதில்லை.
திருடு என்பதும் லஞ்சம் வாங்குவதும் முதன் முறை மட்டுமே தடுமாற்றமாக இருக்கும். அப்போதே சிக்குபவர்கள் பாக்கியவான்கள். மற்றவர்களால் அந்த பாதையில் இருந்து திரும்ப முடியாது. மீண்டும் மீண்டும் பாதாளம் நோக்கி பாய்ந்துகொண்டே இருப்பார்கள். எல்லோருக்கும் அவரவர் செய்கைக்கு ஒரு நியாயம் இருக்கும். அது பசியாக இருக்கலாம், பழி வாங்கலாக இருக்கலாம், கோபமாக இருக்கலாம்.
gyaanaguru.com Changed status to publish
