ஞானகுரு :
ஒரு பள்ளிக்கூடம் நன்றாக இயங்கிக்கொண்டு இருக்கும். அந்த பள்ளிக்கு ஒரு புதிய நிர்வாகி வருவார். காலை 9 மணிக்கு தொடங்கும் பள்ளி நேரத்தை 8:45 என்று மாற்றி அமைத்து, அப்போதுதான் மாணவர்கள் அதிக சுறுசுறுப்புடன் திகழ்வார்கள் என்று ஒரு காரணமும் சொல்வார். மீண்டும் வேறு ஒரு நிர்வாகி வருவார். அவர் மீண்டும் 9 மணிக்கு மாற்றியமைத்து, அதற்கும் ஒரு காரணம் சொல்வார். இப்படியெல்லாம் மாற்றங்கள் செய்தால்தான், புதிய நிர்வாகி வந்திருப்பதும் செயல்படுவதும் மற்றவர்களுக்குத் தெரியும். இப்படித்தான் இன்றைய அரசியலிலும் நடக்கிறது. தேவையோ இல்லையோ மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும்
gyaanaguru.com Changed status to publish