Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

அஜித் உண்மையிலே கடவுளா..? அஜித் சொன்னாலும் ஏன் ரசிகர்கள் கேட்பதில்லை..? – பி.வேலாயுதம், சேந்தமங்கலம்.

222 viewsDecember 11, 2024
0
gyaanaguru.com December 11, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish December 11, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted December 11, 2024 0 Comments

ஞானகுரு ;

தலைவருக்கான தகுதி இல்லாத விஜய் தன்னை தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் நேரத்தில், அஜித்தும் தன்னை கடவுள் என்றே சொல்லிக்கொள்ளலாம். ஆனால், தன்னை அப்படி அழைக்காதீர்கள் என்று கண்டிக்கிறார். அதற்காக அஜித்தை ரொம்பவும் நல்லவர் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், அவரும் ரஜினிகாந்த் போன்று ஒரு சுயநலமி.

தனக்கு போதுமான அளவுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்த பிறகே மன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார். ஆனால், அது டம்மி அறிவிப்பு என்பது அவருக்கும் தெரியும். தனது ரசிகர்கள் மீது உண்மையிலே அக்கறை கொண்டவர் என்றால், அவர்களுக்கு வழி காட்டும் வகையில் நல்ல கேரக்டர்களை படத்தில் நடிக்கலாம். சிகரெட் குடிப்பது, மது குடிப்பது போன்றவற்றை தவிர்க்கலாம். தனி மனித சாகசங்களை நிறுத்தலாம். அப்படியெல்லாம் செய்யவே மாட்டார். ஏனென்றால் அவருக்கு அப்படிப்பட்ட முட்டாள் ரசிகர்களே தேவை.

இன்னொரு விஷயம் தெரியுமா? அஜித் யாரேனும் ஒரு உதவி இயக்குனருக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவி செய்தால் உடனே அது செய்தியாகிவிடும். பிரியாணி சமைத்துப் போட்டால் அதுவும் செய்தியாகிவிடும். பணம் பெற்ற உதவி இயக்குனர் அதை வெளியில் சொல்லியிருக்க மாட்டார். பிரியாணி சாப்பிட்டவர்கள் வெளியே பேசியிருக்க மாட்டார்கள். ஆனாலும், எல்லாம் செய்தியாகிறது..? எல்லாமே நடிப்பு. சினிமாவுக்கு வெளியிலும் நன்றாகவே நடிக்கிறார் அஜித்.

gyaanaguru.com Changed status to publish December 11, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US