ஞானகுரு :
நிர்வாகத்தில் ஒருவர் தெரிந்து தவறு செய்திருந்தால் அத்தனை பேருக்கும் தெரியும் வகையில் தண்டனை இருக்க வேண்டும். அறியாமல் செய்த தவறு என்றால் தனியறையில் கண்டிப்பது போதும். தவறுக்கு ஒருவர் வருந்துவது மட்டும் போதாது, திருந்தவும் வேண்டும். மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்வதை ஏற்கத் தேவையில்லை.
குழந்தை தவறு செய்துவிட்டால் பெற்றோரில் ஒருவர் நிச்சயம் கண்டிக்க வேண்டும். பெரிய தவறு என்றால் தண்டிக்கவும் வேண்டாம். சின்னப்பிள்ளை தானே என்று அசட்டையாக மன்னிப்பது, அந்த குழந்தைக்குச் செய்யும் துரோகம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். பெற்றோரால் அடக்கப்படாத பிள்ளைகளே காவலர்களால் தண்டிக்கப்படுகிறார்கள்.
gyaanaguru.com Changed status to publish
