Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

ஒருவரது லட்சியம் நிறைவேறியதும் மகிழ்ச்சி கிடைத்துவிடுமா..?

234 viewsNovember 1, 2024
0
gyaanaguru.com November 1, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 1, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 1, 2024 0 Comments

ஞானகுரு ;

இல்லை. முன்பைவிட மோசமான துன்பநிலைக்கே நிறைய பேர் ஆளாகிறார்கள். எந்த ஒரு லட்சியத்துடனும் வாழ்க்கை முடிவடைவதில்லை என்பதால் அடுத்த ஒரு லட்சியத்தை உருவாக்கவேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.  ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு பதக்கம் வாங்கினால் போதும் என்றுதான் லட்சியம் வைத்திருப்பான். ஒரு பதக்கம் வாங்கியதும், அடுத்த போட்டியில் பங்கேற்பீர்களா என்று கேட்பார்கள். உடனே அடுத்த போட்டியில் இரண்டு பதக்கம் வாங்குவதற்கு முயற்சி செய்வேன் என்று சொல்வான். அதற்காக இரண்டு மடங்கு கடுமையாக உழைப்பான். தன்னுடைய உடலுக்கு வயதாகிறது, தன்னைவிட இளையவர்கள் போட்டியில் நுழைவார்கள் என்ற எண்ணம் இல்லாமல் மீண்டும்மீண்டும் போட்டியில் கலந்துகொள்வான். ஒரு கட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்துவிடுவான். அதன்பிறகு வாழ்நாள் முழுவதும் தோற்றுப்போன மனநிலையில்தான் வாழ்வான். எந்த ஒரு லட்சியமும் வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் தரக்கூடியதில்லை என்ற உண்மையை அனைவரும் அறிந்துகொள்வது அவசியம்.

gyaanaguru.com Changed status to publish November 1, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US