ஞானகுரு :
நிறைய பணம் கட்டி படிக்கவைத்தால் எதிர்காலத்தில் நிறையநிறைய சம்பாதிப்பான் என்று கணக்குப் போடும் பெற்றோர்கள், இருப்பதிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இடத்தைத் தேர்வு செய்கிறார்கள். வியாபாரப் புத்தியுடன் மக்கள் யோசிப்பதால் கல்விக்கூடம் நடத்துபவர்களும் ஆசையைத் தூண்டும் வகையில் கட்டிடம் கட்டி வைத்து கறாராக வசூல் வேட்டை நடத்துகிறார்கள்.
இன்றும் இலவசமாக கல்வி கொடுக்கும் பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கத்தான் செய்கின்றன. இலவச பள்ளியையும் இலவச மருத்துவத்தையும் அவமானமாகக் கருதுவதாலே சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் வீணாகக் கொட்டிக் கொடுத்து ஏமாந்து நிற்கிறார்கள். தேவையே வியாபாரத்தை ஊக்குவிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
gyaanaguru.com Changed status to publish July 25, 2024