மெரினா இணைப்பு சாலைக்குப் போராட்டம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 209

மெரினா கடற்கரையைப் பொலிவூட்டுவதற்கு ஒரு மேயராக என்னவெல்லாம் செய்ய முடியும் என்று ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு செய்தார் மேயர் சைதை துரைசாமி. அந்த நேரத்தில் அவருக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது மெரினா இணைப்பு சாலை.

அண்ணா சமாதி தொடங்கி கலங்கரை விளக்கம் வரையிலும் கடற்கரைப் பகுதிகள் சீராக இருந்த நிலையில், கலங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையிலான கடற்கரை சாலை மட்டும் எந்த பராமரிப்பும் இல்லாமல் அவலட்சணமாக இருந்தது. கடற்கரை மணல் பரப்பிலேயே நிறைய குடிசைகள் முளைத்திருந்தன. மீன் விற்பனை அந்த கடற்கரை பகுதி முழுக்கவே கணக்குவழக்கு இல்லாமல் நடந்துவந்தது. அதோடு, விற்பனையாகாத மீன்களை ரோடுகளில் பரப்பி காய வைக்கவும் செய்தார்கள்.

அந்த பகுதியைச் சேர்ந்த மீனவ மக்களுக்குப் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் இயற்கை கடன்களை கடற்கரை பகுதியில் செய்துவந்தனர். ரோட்டில் வைத்து சமைப்பது, துவைப்பது போன்றவைகளும் செய்துவந்தனர். இதனால் கலங்கரை விளக்கம் தாண்டிய பட்டினப்பாக்கம் சாலையில் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்தார்கள்.

இந்த இணைப்பு சாலையை சீரமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு நல்ல தீர்வாக அமையும் என்பதை அறிந்தார் மேயர் சைதை துரைசாமி. இதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு முதலில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அந்த நேரத்தில் இந்த கடற்கரை பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்ட அதிகாரிகளை உள்ளேயே நுழைய விடாத வகையில் மீனவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். மாற்றம் என்ற பெயரில் தங்கள் குடிசைகள் அகற்றப்படும், மீன் விற்பனை செய்து பிழைக்கும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சினார்கள். எனவே, இந்த பகுதி மக்களை மீறி எந்த மாற்றமும் செய்யவே முடியாது என்றே அனைவரும் கருதினார்கள்.

  • நாளை பார்க்கலாம். 

Leave a Comment