நாய்க்கு சொத்து… பிள்ளைக்கு..?

ஆச்சர்யம் ஆனால் உண்மை


மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் பதிபாபா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண் வர்மா. இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்த எதையும் கொடுக்க அவருக்கு விருப்பமில்லை.

நாராயண் வர்மாவுக்கு 18 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவருடைய மனைவிக்கும், அவர் வளர்த்துவரும் நாய்க்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்க விரும்பினார். அவருடைய விருப்பப்படி அதைச் சமீபத்தில் எழுதிவைத்துள்ளார்

. அந்த நாயை, சாகும்வரை பராமரிப்பவர்களுக்கு 9 ஏக்கர் நிலம் செல்லும். இதுதொடர்பாக நாராயண் வர்மா,  ‘நான் எனது பிள்ளைகளை நம்பவில்லை. அதனால் என்னுடைய மரணத்திற்கு பின் மனைவிக்கும், வளர்ப்பு நாய்க்கும் சொத்து கிடைக்கும் வகையில் எழுதி வைத்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment