மாணவர்களுக்குப் பொதுஅறிவு மேம்பாடு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 148

கடந்த 2005ம் ஆண்டு முதல் மனிதநேய இலவசக் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கி ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., சிவில் நீதிபதிகள் என கிட்டத்தட்ட 35 வகையிலான அரசு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி வழங்கி வருபவர் சைதை துரைசாமி. தகுதியும் திறமையும் உள்ள மாணவர்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக ஜாதி, மதம், இன பாகுபாடு பாராமல் சுமார் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்களை மேற்பட்ட மாணவர்களை மத்திய, மாநில அரசுகளின் உயர் பதவிகளுக்கும் சுமார் 40 ஆயிரம் மாணவர்களை மத்திய, மாநில அரசுகளின் கீழ்நிலைப் பதவிகளுக்கும் அனுப்பியிருக்கிறார். ஆகவே, மாணவர்களுக்கு கல்வியுடன் பொது அறிவு மிகவும் முக்கியம் என்பதை நன்கு அறிவார்.

எனவே, மேயராகப் பதவி  ஏற்றதும் மாநகாரட்சிப் பள்ளி மாணவர்களுக்காக பரிசோதனைக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், .சுகாதாரமான சுற்றுச்சூழல் ஆகியவற்றை உருவாக்கியது மட்டுமின்றி மாணவர்களுக்கு பொது அறிவு வளர்ப்பதற்கும் திட்டங்கள் தீட்டினார். மாணவர்களிடம் மேயர் சைதை துரைசாமி, ‘’செய்தித் தாள் படிக்கும் பழக்கத்தை சிறிய வயதிலிருந்தே மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். வகுப்பறையைக் கல்வி மட்டும் போதாது. அதைத் தாண்டி நாட்டு நடப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல், அன்றாடச் செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்…’’ என்று அறிவுறுத்தி வந்தார்.

அதேநேரம், மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் வீடுகளில் செய்தித்தாள் வாங்குவதற்கு வசதி, வாய்ப்புகள் இருக்காது என்பதை மேயர் சைதை துரைசாமி நன்கு அறிவார். எனவே, மாநகராட்சிப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்புகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டது.

மாணவர்கள் நாளிதழ் படிப்பதற்கு ஆசிரியர்கள் உற்சாகப்படுத்துவதற்கும் உதவி புரிவதற்கும் அறிவுத்தப்பட்டனர். அது மட்டுமின்றி வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் வினாடி – வினா போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதற்கும் மேயர் சைதை துரைசாமி ஏற்பாடு செய்தார். மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மேயர் சைதை துரைசாமி எடுத்துக்கொண்ட அக்கறை மற்றும் முயற்சிகளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் இருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment