புரட்சித்தலைவியின் பாராட்டு

என்ன செய்தார் சைதை துரைசாமி – 343

அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் செல்வதற்கு அரசியல்வாதிகள் வெகுவாக ஆர்வம் காட்டுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், இதில்  மேயர் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக தெளிவு படுத்தினார். அதாவது, ‘சொந்த செலவில் செல்வதற்கு அனுமதி வேண்டும், அரசு பணத்தை செலவழித்துச் செல்வதற்கு நான் விரும்பவில்லை’ என்று தெளிவுபடுத்தினார்.

இந்த விஷயம் அன்றைய முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், ‘’மேயர் பதவிக்கு வந்ததும் அரசு கார், உதவியாளர்கள், பெட்ரோல் செலவு என எதுவுமே வேண்டாம் என்று தெரிவித்தார். அதன்படியே நடந்துகொண்டு இருக்கிறார். இந்த விஷயத்தில் அவர் பிடிவாதமாக இருப்பார் எனவே, அவர் விருப்பப்படியே இருக்கட்டும்’ என்று அனுமதி கொடுத்து பாராட்டினார்.

சொந்தப் பணத்தில் அரசு முறை சுற்றுப்பயணம் செய்யும் முதல் மேயர் என்று இதனை அதிகாரிகளும் ஆச்சர்யமாகப் பாராட்டினார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழியைக் கடைபிடித்த மேயர் சைதை துரைசாமி, கடைசி வரையிலும் மாநகராட்சிக்கு ஒரு ரூபாய் கூட செலவு வைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், சிங்கப்பூர் செல்வதற்கு மிகவும் ஆர்வமாகக் காத்திருந்தார் மேயர் சைதை துரைசாமி. ஏனென்றால், ஒரு காலத்தில் மிகவும் மோசமாகப் பராமரிக்கப்பட்ட சிங்கப்பூர் இன்று உலகிலேயே முக்கியமான சுற்றுலாஸ்தலமாக மாறியிருக்கிறது என்றால், சிங்கப்பூர் போலவே சென்னையையும் மாற்ற முடியும் என்று நம்பினார். அதனாலே, சிங்கப்பூர் பயணத்திற்கு அதிக ஆர்வம் காட்டினார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment