என்ன செய்தார் சைதை துரைசாமி – 230
மழைக் காலம் என்றாலே வாகனவோட்டிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் நிலையை பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி மாற்றிக் காட்டினார். புதிய தொழில்நுட்பமான ‘கோல்டு மிக்ஸ்’ தார்க் கலவை மூலம் மழை பெய்துகொண்டு இருந்தபோதே சேதமடைந்த சாலைகள் செப்பனிடப்பட்டன. அதனால், பாதுகாப்பான பயணம் மக்களுக்குச் சாத்தியமானது.
மழையினால் எந்தெந்த சாலைகள் பாதிக்கப்படுகின்றன என்று கண்டறியப்பட்டு, உடனுக்குடன் சீரமைப்பு மேற்கொள்ளும் மேயர் சைதை துரைசாமியின் நடவடிக்கை முதல்வர் ஜெயலலிதாவுக்குப் போய்ச் சேர்ந்தது. புத்தம் புதிய தொழில்நுட்பங்கள் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் மேயர் சைதை துரைசாமியை நேரில் அழைத்துப் பாராட்டினார். அதோடு, வேறு எந்தெந்த துறைகளில் என்னென்ன புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதையும் கேட்டு அறிந்துகொண்டார்.
மக்களின் நன்மைக்கு இதுபோன்ற சீர்திருத்தங்கள் செய்வதற்கு எந்தத் தயக்கமும் வேண்டாம், தைரியமாக பரீட்சார்த்த முயற்சியில் இறங்கலாம் என்று பச்சைக்கொடி காட்டினார். அதோடு, பெருநகர சென்னை மக்களின் நலனுக்காக இரவும் பகலுமாக மேயர் சைதை துரைசாமி உழைத்துவருவதும், அரசு சலுகைகள் பெறாமல் நேர்மையாகப் பணியாற்றுவதையும் முதல்வர் அறிவார் என்பதால், அவருக்கு முழுமையான ஆதரவு கொடுத்தார்.
அதனால் தான், மேயர் சைதை துரைசாமி மீது நிறைய பேர் பொய்யாக புகார் சொன்ன போதும், அது குறித்து எந்த விளக்கமும் கேட்டதில்லை. முழுமையாக ஐந்து ஆண்டு காலமும் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியாகப் பணியாற்றி சாதனை படைத்தார்.
- நாளை பார்க்கலாம்.