கவிதை என்பது கண்ணீரின் மூச்சு

கவித்துவம் – 1

நிறைய நிறைய எழுதவேண்டிய ஒரு வாழ்க்கையை, சில வரிகளில் அடக்குவதே கவிதை. இது, சொல்ல முடியாத வலிக்கு மொழி கொடுக்கும். மறந்துபோன நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும். கண்ணீரை வார்த்தைகளாக மாற்றிவிடும்.  

ஒரு நல்ல கவிதை படிக்கப்படுவதில்லை, அது மனதுக்குள் இறங்கி உணரப்படுகிறது. சொற்கள் முடியும் இடத்தில் தொடங்குவதுதான் கவிதை. அப்படிப்பட்ட சில கவிதைகள் இங்கே

பிரியம்

நாம் நேசிக்கும் அனைவருக்கும்

நாம் மட்டுமே நெருக்கமாக

இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை

நமக்கான பிரியமும் மரியாதையும்

உண்மையாக இருந்தால் போதும்

  • லதா

காதல் குழந்தை

ஒர் ஆண் ஒரு பெண்ணால்

அன்புடன் அரவனைக்கப்படும் போது

ஆண் என்று இந்த சமுகம்

ஏற்படுத்திவைத்த

இலக்கணங்களிலிருந்து விடுபட்டு

அன்புக்கு செவிமடுக்கும்

சிறுபிள்ளையாக மாறிப்போவான்

  • லதா

Leave a Comment