கவித்துவம் – 3
நிறைய நிறைய எழுதவேண்டிய ஒரு வாழ்க்கையை, சில வரிகளில் அடக்குவதே கவிதை. இது, சொல்ல முடியாத வலிக்கு மொழி கொடுக்கும். மறந்துபோன நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும். கண்ணீரை வார்த்தைகளாக மாற்றிவிடும்.
ஒரு நல்ல கவிதை படிக்கப்படுவதில்லை, அது மனதுக்குள் இறங்கி உணரப்படுகிறது. சொற்கள் முடியும் இடத்தில் தொடங்குவதுதான் கவிதை. அப்படிப்பட்ட சில கவிதைகள் இங்கே…
வெற்றிடம்
ஒரு நண்பனால் உருவாக்கப்பட்ட
வெற்றிடத்தை
இன்னொரு நண்பனால்
நிரப்பிவிட முடியாது.
அது என்றைக்குமே
வெற்றிடமாகவே இருக்கும்
அவனே திரும்பி வந்தால் கூட
அதே போல நட்பு இருக்குமா
எனத் தெரியாது
- எஸ்.ராமகிருஷ்ணன்
வன்முறை
மனித மனம் நூற்றாண்டுகளாகவே
சக மனிதன் மீது
எல்லையற்ற வன்முறையை செலுத்தி
அதில் உற்சாகம் காண்பதற்கு மட்டும்
பழக்கபட்டு இருக்கிறது
- எஸ்.ராமகிருஷ்ணன்
