ஜோக்ஸ் மழை
கைதி 1 : கட்சித் தலைவர் மேல நான் ரொம்பவும் உயிரா இருந்தேன். அதுக்காக என்னை ஜெயில்ல போட்டாங்க…
கைதி 2 : இதென்ன அநியாயமா இருக்கே.. அப்படி என்ன செஞ்ச்சே
கைதி 1 : ரூபாய் நோட்டுல காந்தி படத்துக்குப் பதிலா என்னோட கட்சித் தலைவர் படத்தை அடிச்சேன்.
……………………
நர்ஸ் : டாக்டர், கேடி பக்கிரி நம்ம எக்ஸ்ரே மிஷினை தூக்கிட்டுப் போறான், அவன்கிட்டே என்ன சொன்னீங்க..?
டாக்டர் : உன்னை நல்ல செக் பண்ணனும், எக்ஸ்ரே எடுத்துக்கோன்னு சொன்னேன்.
………………………..
மனைவி : என்னங்க, நம்ம குடும்ப ரகசியம் இனிமே வெளியே தெரியக்கூடாது…
கணவன் : அப்படின்னா, நீ எனக்கு வலிக்கிற மாதிரி அடிக்காம இருந்தா போதும்.
……………………………….
நோயாளி : என்ன டாக்டர் எனக்கு வந்திருக்கிற நோயை குணப்படுத்தவே முடியாதுன்னு சொல்றீங்க… அப்படி என்ன வியாதி டாக்டர் இது..?
டாக்டர் : அது தெரிஞ்சாத்தான் நானே குணப்படுத்திடுவேனே…
………………………..
டாக்டர் : என்னங்க, பக்கத்து தெருவுல இருந்தும் என் கிளினிக்கிற்கு 10 வருஷமா வராம இருந்திருக்கீங்க…
நோயாளி : எனக்கு அப்பல்லாம் உயிர் மேல ஆசை இருந்திச்சு டாக்டர்.
……………………………