ஆரோக்கிய வழிகாட்டி
மாதவிலக்கு காலத்தில் அதிக வலி, வேதனை அனுபவிக்கும் பெண்கள், ‘கர்ப்பப்பையை எடுத்துடுங்க’ என்று கதறுவதுண்டு. பணத்துக்கு ஆசைப்படும் சில மருத்துவர்களும் அகற்றிவிடுகிறார்கள்.
உண்மையில், கர்ப்பப்பையில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படாத வரை அதனை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. மாதவிலக்கு வலி, ரத்தப்போக்கு போன்றவை அதிகம் இருந்தால் அதற்கு சரியான சிகிச்சை கொடுப்பதே முக்கியம்.
கர்ப்பப்பை எடுத்துவிட்டால் அதன் பிறகு ஒரு பிரச்னையும் இல்லை என்று நினைப்பது, உண்மை அல்ல. ஓர் உறுப்பை அகற்றுவதன் பொருட்டு சில பக்கவிளைவுகள் நிச்சயம் இருக்கும். ஒருசிலருக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி உடனடியாகத் தேவைப்படலாம்.
அதேநேரம், மருத்துவக் காரணங்களால் கர்ப்பப்பை எடுக்கவேண்டிய சூழ்நிலை என்றால், கவலைப்பட அவசியம் இல்லை. ஏனென்றால் அதைவிட, பக்கவிளைவுகள் குறைவு. அதேநேரம், கர்ப்பப்பை அகற்றத்துக்கும் தாம்பத்திய உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கர்ப்பப்பை நீக்கப்பட்ட பிறகு மாதவிலக்கு நிகழாது என்பதால் கர்ப்பமடையும் அச்சமின்றி மகிழ்ச்சியாக உறவை அனுபவிக்க முடியும். அறுவைசிகிச்சை முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு வழக்கம் போல் உறவு கொள்ளலாம். உறவு கொள்ளும் நேரத்தில் கர்ப்பப்பை இருப்பதற்கும் இல்லாததற்கும் எந்த வித்தியாசமும் தென்படாது, என்பதால் கவலைப்பட அவசியமில்லை.