சென்னையில் பிளாஸ்டிக் சாலைகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 234

இன்றைய உலகிற்கு ஒரு சவாலான பிரச்னையாக பிளாஸ்டிக் பொருட்கள் உருமாறி நிற்கின்றன. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை கண்ட இடங்களிலும் தூக்கிப் போடுவதால் தண்ணீர் செல்வதற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. பிளாஸ்டிக்கை எரிப்பதும், மறுசுழற்சி செய்வதும் மக்களுக்கு ஆபத்தான நோய்களை உருவாக்குகின்றன. அதோடு சுற்றுச்சூழலுக்கு எமனாகவும் இருந்துவருகின்றன.

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய முடியாமல் அழிக்கவும் வழியில்லாமல் முன்னேறிய நாடுகள் எல்லாமே தடுமாறி வருகின்றன. இந்த நிலையில், சாலை அமைக்கும்போது, பிளாஸ்டிக் சேர்த்துக்கொண்டால், சாலையின் ஆயுட்காலம் கூடும் எனும் ஆய்வு குறித்து மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. இது குறித்து பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பரீட்சார்த்த ரீதியில் சாலை மூலப்பொருட்களில் பிளாஸ்டிக் கலந்து பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தார் சைதை துரைசாமி.

சாலைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சாலைக்குள் மழைநீர் புகுந்து செல்வது குறைகிறது. அதனால் மழையினால் சாலைகள் சேதம் அடைவது குறையும் என்பது நல்ல தகவலாக இருந்தது. பொதுவாக தார்ச் சாலைகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். அதேநேரம், பிளாஸ்டிக் சேர்த்து தார்ச் சாலைகள் அமைக்கப்படும்போது, 7 ஆண்டுகள் வரையிலும் தாக்குப்பிடிப்பதற்கு வாய்ப்பு உண்டு என்பதும் தெரியவந்தது. இதனால் தார் தேவைப்படும் அளவும் குறைந்தது.

பிளாஸ்டிக் கழிவுகளை இந்த வகையில் குறைப்பது சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனை பெருநகர சென்னையின் தார் சாலையில் பிளாஸ்டிக் புகுத்திய மேயர் சைதை துரைசாமியின் நடவடிக்கை இன்று வரையிலும் பாராட்டப்படுகின்றன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment