என்ன செய்தார் சைதை துரைசாமி – 308
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர் மேயர் சைதை துரைசாமி அறியப்படுகிறார். புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் மேயராக அடையாளம் காட்டப்பட்டவர். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி என்றாலும் நவீன டெக்னாலஜிகளை அறிந்துகொள்வதிலும், அவற்றை பயன்படுத்துவதிலும் முதல் நபராக இருந்தார் மேயர் சைதை துரைசாமி.
தெருவில் குப்பை நிரம்பி வழிகிறது, இரண்டு நாட்களாக அகற்றுவதற்கு யாரும் வரவில்லை என்று பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது சென்னை மாநகராட்சிக்கு புகார் வருவது வழக்கம். இந்த புகார் மாநகராட்சி ஆய்வாளர்களுக்குத் தெரிவிக்கப்படும். அவர்கள் சில மணி நேரத்தில், ‘குப்பையை அகற்றிவிட்டோம்’ என்று சொல்லி புகாரை முடித்துவிடுவார்கள். இந்த விஷயத்தில் உண்மையிலே குப்பை அகற்றப்பட்டதா என்பதை உறுதி செய்யமுடியாத நிலை நிலவியது.
இந்த விஷயத்தை மேயர் சைதை துரைசாமி சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. புகார்கள் மீதான நடவடிக்கைக்கு தெளிவான ஆதாரம் கொடுக்க வேண்டியது முக்கியம் என்று கருதினார். இதற்கு என்ன செய்வது என்று அதிகாரிகள், ஆய்வாளர்களிடம் ஆலோசனை நடத்தினார். இப்போதைய நடைமுறை தெளிவாகவே இருக்கிறது. புகார் சொல்லப்பட்டதும், அந்த இடத்தில் அகற்றிவிடுகிறோம். புகார் முடித்துவைக்கப்படுகிறது என்ற் சொன்னார்கள்.
புகார் முடித்துவைத்ததற்கு ஆதாரம் வேண்டும், அதாவது புகார் கூறப்பட்ட இடத்தில் குப்பை இருந்த நிலை மற்றும் அகற்றப்பட்ட நிலை ஆகிய இரண்டு புகைப்படங்கள் வேண்டும் என்று கேட்டார். மேயர் சைதை துரைசாமியின் கோரிக்கையைக் கேட்டதும் அதிகார்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கொதித்தார்கள்.
- நாளை பார்க்கலாம்.