என்ன செய்தார் சைதை துரைசாமி 422
டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுக்கவே மக்களிடம் பெரும் அச்சத்தை உருவாக்கியிருந்தது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவந்தார்.
ஆனாலும், மருந்து இல்லை என்பது மிகப்பெரும் குறையாகவும், அச்சமாகவும் மக்களிடம் இருந்தது. இந்த நேரத்தில்தான் ஆங்கில மருத்துவத்தால் சிகிச்சை அளிக்க முடியாத டெங்கு காய்ச்சலை தமிழ் மருந்து குணப்படுத்த முடியும் என்று உறுதிபடுத்தினார் மேயர் சைதை துரைசாமி.
இந்த நல்ல தகவலை முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி, அவர் மூலம் இந்த சித்த மருந்துகள் பற்றிய நம்பிக்கையை மக்களுக்கு உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இதற்காக ஆய்வு முடிவுகளுடன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் மேயர் சைதை துரைசாமி.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததும், ‘டெங்கு நோய்க்கு எதிராக நிலவேம்பு மற்றும் பப்பாளி இரண்டுமே வீரியத்துடன் நன்கு செயல் புரிகிறது, இதனை மக்கள் பயன்படுத்தலாம். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை’ என்று தெரிவித்து அதற்கு ஆதாரமாக கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம் கொடுத்திருக்கும் ஆய்வு ரிப்போர்ட்டைக் கொடுத்தார்.
இதற்கு ஜெயலலிதாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா..?
- நாளை பார்க்கலாம்.