• Home
  • அரசியல்
  • தி.மு.கவுக்கு விஜய் கொடுத்த முதல் அடியே பெரியார் இடி.

தி.மு.கவுக்கு விஜய் கொடுத்த முதல் அடியே பெரியார் இடி.

Image

சிங்கம் களம் இறங்கிடுச்சு

பெரியார் எங்களுக்கு உரிய சொத்து என்பது போன்று தி.மு.க.வினர் இன்று பெருவிழா நடத்திவரும் நேரத்தில், தனி மனிதனாக பெரியார் திடலுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் விஜய்.

விஜய்க்குக் கொள்கை இருக்கிறதா, தொலைநோக்குப் பார்வை இருக்கிறதா என்றெல்லாம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் இதன் மூலம் விடை கொடுத்திருக்கிறார் விஜய். இந்த சம்பவத்திற்கு விஜய் நிர்வாகிகள் முழு பொழிப்புரை வழங்கியிருக்கிறார்கள்.

பெரியார் திடலுக்கு விஜய் சென்றது குறித்துப் பேசும் நிர்வாகிகள், ‘’பெரியார் பிறந்தநாளுக்கு அவரை மதிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு மாலை இட்டு, வணங்குவது வழக்கம். ஆனால், தமிழக வெற்றிக் கழகம், பெரியாரின் சம உரிமை, சமத்துவம், சமூக நீதிக் கொள்கைகளைப் பெயரளவில் மட்டும் இல்லாமல் மனதளவில், சமரசமின்றிப் பெரிதும் மதித்துப் போற்றும் ஓர் அரசியல் இயக்கம். அதேபோல அவரது பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பெண்கள் பாதுகாப்பு போன்ற பெண்கள் சார்ந்த முன்னெடுப்பைக் கொள்கையாகவேப் பின்பற்றுவதில் மற்றும் அதன் செயலாக்கத்தில் மிக உறுதியாக நிற்கப்போகும் இயக்கம்.

இப்படியெல்லாம் பெரியாரை மனதில் தாங்கி மதித்துப் போற்றுகிற தமிழக வெற்றிக் கழகம், அவரது பிறந்தநாளுக்கு வணக்கம் செலுத்த அர்த்தம் மிகுந்த ஓர் இடத்தை தேர்வு செய்ய முடிவு செய்தது. பெரியார் உலவிய, பெரியாரின் காலடித் தடங்கள் பதிந்த இடத்தில் அவருக்குப் பிறந்தநாள் வணக்கம் செலுத்துவதுதான் ஓர் கொள்கைவழி வணக்கமாகவும் அர்த்தப்படும் என்பதை உணர்ந்து தேர்ந்தெடுத்த இடம்தான் பெரியார் திடல். 1965ல் இருந்து விடுதலை நாளிதழின் அலுவலகமாகவும் செயல்படும் அந்த இடம், பெரியார் இறக்கும் வரை அவர் உலவிய இடங்களில் ஒன்று. அவர் சுவாசம் கலந்த காற்று இருந்த இடம். இன்றைக்கும் அவரது சுவடுகள் அழியாமல் பாதுகாக்கப்படும் ஓர் இடம். அதனால்தான், அந்த இடத்தில் இருக்கும் பிரமாண்டமான பெரியார் சிலைக்கு, அதன் பீடத்தில் மலர்தூவி வணக்கம் செலுத்த முடிவெடுத்தே அங்கு சென்றோம். சி

ங்கத்திற்கு, அது வாழ்ந்த குகையிலேயே சென்று வணக்கம் செலுத்துதல் என்பது சிங்கத்தின் ஆசியை நேரடியாகப் பெறுவது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும். அது, அரசியல் களத்தில் கொள்கை ரீதியாக உறுதியாகக் களமாட ஓர் உத்வேகத்தை தரும். மேலும்,இந்த முடிவு, உணர்வுப்பூவமாக மனதின் ஆழத்தில் இருந்து எடுத்த ஓர் அழுத்தமான, அர்த்தம் பொதிந்த, உறுதிமிக்க அரசியல் முடிவு’’ என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

இந்த வேகம் தொடரட்டும்.

Leave a Comment