சரியான வழி தெரிஞ்சுக்கோங்க
அத்தனை உயிரினங்களும் தண்ணீரை மிகச்சரியாகக் குடிக்கும்போது, மனிதர்கள் மட்டுமே தவறாகக் குடிக்கிறார்கள். அதாவது ஒரு பாட்டில் அல்லது செம்பு நிறைய தண்ணீர் வைத்தால், அதனை முழுமையாக மளமளவென குடித்து முடிக்கிறார்கள். இப்படி தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் வயிறு நிரம்பலாம் என்பது தவிர வேறு எந்த பயனும் இல்லை.
அப்படி என்றால் எப்படி குடிப்பது..?
நாய், பூனை, பறவைகள் எப்படி தண்ணீர் குடிக்கின்றன என்பதை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மடக்காகக் குடித்தல் வேண்டும். அதுவும் ஒரு நேரத்தில் கொஞ்சம் மட்டுமே குடிக்க வேண்டும். சூடான காபி எப்படிக் குடிப்பீர்களோ, அதே பாணியில் அதே அளவு தண்ணீர் குடித்தால் போதும். போதிய இடைவெளிக்குப் பிறகு அதே அளவு தண்ணீர் மீண்டும் மீண்டும் குடிக்க முடியும்.
பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பதை பார்த்திருப்பீர்கள். ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் குடித்தால் அவர்களால் சட்டென ஓட முடியாது. அதனாலே கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
அதேபோல் சாப்பாட்டுக்கு முன்னதாகவும் பின்னரும் குறைந்தது அரை மணி நேர இடைவெளியில் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் எச்சிலில் கலந்திருக்கும் வைட்டமின்கள், மினரல்கள், ஹார்மோன் சுரப்புகள், என்சைம்கள், அமிலங்கள், நல்ல பாக்டீரியா உட்பட அனைத்தும் தண்ணீருடன் சேர்ந்து உடலுக்குள் நுழைந்து சத்துக்களாக மாறும். உணவில் உள்ள சத்துக்களையும், ஸ்டார்ச்சையும், கொழுப்பையும் உடைத்து செரிமானத்துக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான என்சைம்கள் எச்சிலில் உள்ளன.