• Home
  • சட்டம்
  • பட்டா மூலம் சொத்துக்கு உரிமை கேட்க முடியாது.

பட்டா மூலம் சொத்துக்கு உரிமை கேட்க முடியாது.

Image

வந்தாச்சு புதிய சட்டம்

அரசு அலுவலர்களைக் கையில் போட்டுக்கொண்டு ஒரிஜினல் பத்திரத்தின் அடிப்படையில் இல்லாமல் சிலர் போலியாக பட்டா மாறுதல் செய்துகொள்வதுண்டு. பட்டா வைத்திருப்பவரே உண்மையான உரிமையாளர் என்று நடந்துவந்த சீட்டிங் கலாச்சாரத்துக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!

எனவே, வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட முடியாது. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால், அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும். மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.

ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து, இந்த விவகாரத்தில் தவறு செய்யும் விஏஓக்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

புதிய சட்டத்தின் படி சொத்தின் உரிமையாளர் யார் என்பதை வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது. உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.

மேலும், பட்டா என்பது நிலத்தின் உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது என்பதுடன் பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.

அதேபோல் கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு

பட்டா வழங்க வேண்டும். பட்டா பெயர் மாற்றம் செய்ய நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும். போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா் பட்டா மாற்றம் செய்ய முடியாது.

எனவே, இனி பட்டாவை வைத்து யாருடைய இடத்தையும் அபகரித்துவிட முடியாது.

  • வழக்கறிஞர் நிலா. மதுரை உயர்நீதிமன்றம்.
  • தொடர்புக்கு : 7255753999

Leave a Comment