கவரப்பேட்டை விபத்து
மோடியின் கடந்த 10 ஆண்டு கால காட்சியில் 75 விபத்துகள் நடைபெற்று எக்கச்சக்க உயிர்கள் பறி போயிருக்கின்றன. இந்த விபத்துகளில் இருந்து அரசு எந்த பாடமும் படிக்கவே இல்லை என்று கவரைப்பேட்டை ரயில் விபத்தை அடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பயணிகளை சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார். ரயில் விபத்துக்கான காரணங்களையும் கேட்டு அறிந்திருக்கிறார். தொடர் விபத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்துக்கு விரைந்துகொண்டு இருக்கிறாரா என்று பார்த்தால், அவர் விஜயதசமிக் கொண்டாட்டத்தில் செம பிஸியாக இருக்கிறார்.
இதைக் கண்டு கடுப்பாகிப் போயிருக்கும் திருமுருகன் காந்தி, ‘’சங்கி பயலுகளால ஒரு துறையை கூட ஒழுங்கா நடத்த வக்கில்லாம ஊருக்குள்ள கலவரம் செய்ய அலையரானுக. எத்தனை ரயில்வே விபத்துகள் அன்றாடம் கேள்விப்படுகிறோம். பிஜேபில ஒருத்தன் கூட இதை பத்தி வெக்கப்படாம, முஸ்லீம் மேல வன்மத்தை கக்கறது, தமிழ்நாட்டு மேல வன்மத்தை கக்கறது, கோவில்ல பூசை நடக்கல, மணியாட்ட முடியல, தட்டுல காசு விழுக மாட்டேங்குதுன்னு ஒப்பாரி வைக்கிறானே, தவிர இந்த விபத்தை பத்தி பேச மாட்டேங்குறான்.
ஆயுதபூஜை செய்யரோம், சரஸ்வதி பூஜை செய்யரோம், விஜயதசமி செய்யரோம், பிள்ளையார் சதூர்த்திக்கு மசூதி முன்னாடி கலவரம் செய்யரோம்னு, திருப்பதி லட்டுல தீட்டு பட்டுருச்சுன்னு..’ ஊருக்கு விளங்காதத மட்டும் பேசரானுகளே ஒழிய, விமானம் ஒழுங்கா பறக்குதா, ரயில் விபத்தில்லாம ஓடுதா, உடையாம ரோடு இருக்குதான்னு பார்க்க மாட்டேங்குறானுக. மாட்டு மூத்திரத்த குடிக்கிறவன்கிட்ட அதிகாரத்தை கொடுத்தா மாட்டு சாணி மாதிரி தான் ஆட்சி செய்வான்.
பல்லை கடிச்சிட்டு பேட்டி தருவாரே சனாதன சங்கி எச்.ராஜா எங்கய்யா போனாரு? ரயில் விபத்து நடக்காம இருக்க எதுனா ஸ்லோகம், யாகம் இருக்கான்னு கண்டுபிடிக்க போய்ட்டாய்ங்களோ? எல்லா நெருக்கடியிலையும் காசு சம்பாதிக்க ஸ்லோகம் சொல்ல வருவீங்களே எங்கய்யா போனீங்க… வேதிக் மேத்ஸ், சம்ஸ்கிருத நாசா, புஷ்பக் விமான் இதெல்லாம் எங்கய்யா போச்சு? சங்கிகள் ஆட்சியை ஒழிக்காம யாருக்கும் பாதுகாப்பு கிடையாது.’ என்று ஆவேசம் காட்டியிருக்கிறார்.
அதான் யாருக்கும் எதுவும் ஆகலையே, பிறகு எதுக்கு அமைச்சர் வரணும் என்று பா.ஜ.க.வை சேர்ந்த அமர்பிரசாத் விளக்கம் கொடுக்கிறார். நாடு உருப்பட்ரும்.