நிலவேம்புக் கஷாயத்துக்கு மக்களிடம் அமோக வரவேற்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 84

டெங்கு நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில், மேயர் சைதை துரைசாமியால் அறிமுகம் செய்யப்பட்டு, எல்லா இடங்களிலும் இலவசமாக வழங்கப்பட்ட நிலவேம்புக் கஷாயத்துக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.

இதற்கு முக்கிய காரணம், நிலவேம்பு கஷாயத்தின் மகிமை தான். டெங்கு நோயைக் குணப்படுத்தியது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நிலவேம்புக் கஷாயம் ஆற்றலுடன் செயல்பட்டது. ரத்தத்தில் அதிகமான சர்க்கரை அளவு, மூட்டு வலி, கல்லீரல் நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்னைகளை சரி செய்யவும் கல்லீரலின் நச்சுத்தன்மையை குறைக்கவும் உதவுகிறது.

காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆண்டி வைரஸ் பண்புகளின் காரணமாக டெங்கு மட்டுமின்றி டைபாய்டு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற பல்வேறு காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் நிலவேம்பு உதவுகிறது,

நிலவேம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் முடக்குவாதத்தை சரிசெய்யவும் உதவுகிறது. ரத்தத்திலிருந்து நச்சுக்களை வெளியேற்றுவதால் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது.

வாயு பிரச்சனைகள், மலச்சிக்கல், அல்சர், வயிற்று வலி ஆகியவற்றை சரி செய்யவும் நிலவேம்பு மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக. ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்ய இது உதவுகிறது. நிலவேம்புக் குடிநீரை தினமும் 10 மி.லி முதல் 50 மி.லி வரை அனைவரும் குடிக்கலாம்.

நில வேம்பு போலவே பப்பாளி இலைச் சாறும் டெங்கு நோய்க்கு எதிராக மிகச்சிறப்பாக செயலாற்றியது. டெங்கு நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அளவு மளமளவென குறைந்து உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்த அபாயத்தை பப்பாளி இலைச்சாறு தடுத்து நிறுத்துவதுடன் பிளேட்லெட் அதிகரிப்புக்கு உதவுகிறது. பிளேட்லெட் அளவு குறைந்தவர்கள், ஒரு டம்ளர் பப்பாளி இலைச்சாறு குடித்த சில மணி நேரங்களில் அளவு அதிகரிப்பதை ஆங்கில மருத்துவர்களே ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

பப்பாளி இலையில் நார்ச்சத்து உள்ளதால் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் தசை வலி, மூட்டு வலியையும் குணப்படுத்துகிறது. அதோடு வைட்டமின் ஏ, சி, ஈ,கே மற்றும் பி உள்ளதால் இதையும் அனைவரும் குடிக்கலாம். 

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment