வாயைத் திறந்து சிரிச்சுப்புடு ராசா…

Image

குடும்ப ஜோக்ஸ்

“பக்கத்து வீட்டுப்பையன், என்பொண்ணைக் கூட்டிக்கிட்டு ஓடிட்டான்….”

“கொஞ்சம்கூட கவலை இல்லாம சொல்றீங்களே சார்…?”

“போன தடவை ஓடுனப்போ, ரெண்டே நாள்ல  கொண்டுவந்து விட்டுட்டான் சார், இவன் எத்தனை நாள் தாக்கு பிடிக்கிறான்னு பார்ப்போம்….”

………………

’’உங்க வீட்டுக்குள்ள புகுந்த திருடன், டிவி யைத் தவிர எல்லாத்தையும் தூக்கிட்டுப் போயிட்டான்னு சொல்றீங்க, அப்படியா அசந்து தூங்கிட்டு இருந்தீங்க..?’’

‘’இல்லைங்க, குடும்பத்தோட உட்கார்ந்து சினிமா பார்த்துக்கிட்டு இருந்தோம்’’

……………………….

“எதுக்காக, அந்த ஆஸ்பத்திரி வாசல்ல நிறைய மாலைக்கடை திறந்திருக்கு…?”

“அந்த டாக்டர் ஆபரேஷன் வார்டு திறந்துட்டாராம்…’’

……………………….

‘’உன் மாமியார் உன்னை அடிக்க வந்தாங்கன்னு சொல்ற, ஆனா, அவங்க ஆஸ்பத்திரியில இருக்காங்கன்னு சொல்றே… எதுவுமே புரியலேயேடி..?”

‘’என்னை அடிக்க வந்தப்ப பூரிக்கட்டையால அவங்க கையை தடுத்து நிறுத்தினேங்க… பூரிக்கட்டையும் அவங்க கையும் உடைஞ்சு போச்சாம்’’

…………………….

“டாக்டர்…தலை பயங்கரமா அரிக்குது டாக்டர்….”

“மருந்து எழுதித்தர்றேன்…?”

“அதெல்லாம் வேணாம் டாக்டர், ஒரு அரை மணி நேரம் சொரிஞ்சு விடுஞ்க… அது போதும்’’

……………………..

“நீங்க கொடுத்து வெச்ச ஆளு சார்….உங்க மனைவி எத்தனை பொறுமையா உங்க காயத்துக்கு மருந்து போட்டுக்கிட்டு இருக்காங்க…’’

‘’வயிற்றெரிச்சலை கிளப்பாதய்யா, ராத்திரிக்கு ஃப்ரஷ்ஷா அடிக்கணுமாம், அதுக்குத்தான் இந்த பாசம்’’

………………………

 “டாக்டர்…சாப்பிட்டதும் நிறுத்தவே முடியலை, திருப்பித்திருப்பி சாப்பிடணும்னு தோணுது டாக்டர்…”

“அப்படி என்ன சாப்பிடுறீங்க…?”

“ஆஃபாயில் டாக்டர், அதுக்கு முன்னாடி ஒரு குவார்ட்டர்’’

………………

Leave a Comment