NEFT Vs IMPS Vs RTGS: எது பாதுகாப்பானது வேகமானது மற்றும் நம்பகமானது என்று பார்க்கலாம் வாங்க.
கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி காரணமாக இணைய வங்கி சேவைகள் தற்போது வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் வங்கியின் வாடிக்கையாளரே பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையில் மிகவும் வசதியான வழிகளை உருவாக்கியுள்ளன.
ஒரு வங்கி கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு பணத்தை NEFT, IMPS, RTGS ஆகியவை மூலமாக பரிசோதனை செய்து வருகிறோம்.
மேற்கண்ட மூன்று கட்டண முறைகளும் வேகம், வசதி மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகின்றன, வாடிக்கையாளரின் நிதி பரிவர்த்தனைகளை மென்மையாகவும் ஆக்குகின்றன. இதே நேரத்தில், இந்த வெவ்வேறு கட்டண முறைகள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் NEFT vs RTGS vs IMPS ஆகியவற்றின் வேறுபாடுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்ள போகிறோம்.
இது எப்படி செயல்படுகிறது ஒவ்வொரு நடைமுறைக்கும் உள்ள தொகை அளவு மற்றும் கட்டணங்கள் என்ன என்பதையும் மேற்கண்ட 3 பரிவர்த்தனையில் செயல்திறன் வரம்புகள் மற்றும் கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது இந்த கட்டுரை. ரிலாக்ஸாக உட்கார்ந்து ஹாயாக கற்றுக்கொள்ளுங்கள் வங்கியின் செயல்பாடுகளை.
- NEFT
NEFT நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் எனப்படும் இந்த பரிவர்த்தனை இந்தியா முழுவதும் உள்ள வங்கி கணக்கிற்கு நேரடியாக வங்கி மூலமாகவோ இணைய வங்கி சேவை மூலமாகவோ 24 மணி நேரமும் பணத்தை மாற்ற பயனர்களை அனுமதிக்கிறது. NEFT என்பது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டலில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். NEFT நிதி பரிமாற்றங்களுக்காக இணைய வங்கி சேவை மூலமாக இது 24 மணி நேரமும் செயல்படுகிறது.
NEFT மூலமாக பணம் அனுப்பும் பரிவர்த்தனைகள் நடைமுறை அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
NEFT பரிவர்த்தனை மூலமாக பயனாளியின் கணக்கு வரவு வைக்கப்பட்டவுடன், குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு உறுதிப்படுத்தலை வழங்குகிறது.
NEFT பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி எந்த வரம்புகளையும் அமைக்கவில்லை. இருப்பினும் வங்கிகள் தனிப்பட்ட கட்டணங்கள் அடிப்படையில் NEFT பரிவர்த்தனைக்கு 10000 ரூபாய்க்கு 2 ரூபாய் 50 பைசா மற்றும் ஜிஎஸ்டி எனவும், 2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி என கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வங்கிகளில் உள்ள கணக்கு மற்றும் மினிமம் பேலன்ஸ் அடிப்படையில் சில கணக்குகளுக்கு NEFT கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
2.IMPS (Immediate Payment Service)
ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் உடனடியாகப் பணப் பரிமாற்றம் செய்ய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இந்தச் சேவையை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) நிர்வகிக்கிறது.
அலைபேசி, இணையம், வங்கி கிளை, ஏடிஎம் நிதி சேவைகள் வழங்கும் மூன்றாம் நிலை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற பல வழிகள் மூலமாக 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் மின்னணு நிதி பரிமாற்ற சேவையை வழங்கும் வலுவான மற்றும் நிகழ்நேர நிதி பரிமாற்றத்தை IMPS வழங்குகிறது. IMPS என்பது இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்குள் உடனடி நிதி பரிமாற்றத்தை அனுமதிக்கும் நம்பகமான சேவையாகும்.
எந்தவொரு வங்கியின் கணக்கு வைத்திருப்பவருக்கும் IMPS பரிமாற்ற வசதி கிடைக்கும். அனுப்புநரின் வங்கி பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளித்தவுடன், நிதி உடனடியாக பயனாளியைச் சென்றடையும்.
IMPS-ன் கீழ் ஒரு நாளுக்கு 2 லட்சம் வரை அல்லது வாடிக்கையாளர் உபயோகப்படுத்தும் வங்கி அல்லது நிநி நிறுவனங்களின் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக UPI (United Payments Interface) வரைவு தொகை வரை பயனாளிக்கு நிதியை மாற்றலாம். ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்களுக்கான கட்டணங்கள் பொதுவாக 25 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது, இந்த கட்டணங்கள் தொகை மற்றும் வங்கிகளுக்கு இடையே மாறுபடும்.
3.RTGS (Retail Time Gross Settlement)
RTGS என்பது வங்கி பரிவர்த்தனையில் 2 லட்ச ரூபாய்க்கு மேல் நடைபெறும் பண பரிமாற்றஙகளுக்கு வங்கிகள் வழங்கும் சேவையாகும். மேலும் இது மிகப் பெரிய பண பரிமாற்றத்திற்காக ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் வங்கி சேவையாகும். இதன் மூலமாக எந்தவொரு வங்கி கணக்கிற்கும் வாடிக்கையாளர் வங்கி கணக்கு மூலமாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பலாம். 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் 5 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு ஏற்ப கட்டணங்களை வசூலிக்கிண்றன. சில வங்கிகள் வங்கி கணக்கில் தொடரப்படும் மினிமம் பேலன்ஸ் அடிப்படையில் RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகளுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கின்றன.
- மணியன் கலியமூர்த்தி