• Home
  • தமிழ் லீடர்
  • அதானி பிரச்னையை திசை திருப்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா

அதானி பிரச்னையை திசை திருப்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா

Image

மோடியின் விபரீத விளையாட்டு

அதானி மீதான ஊழல் புகாரை விசாரிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறிவரும் நேரத்தில் திடீரென ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை. அப்படி சாத்தியப்படும் என்றால் பலமுடன் திகழும் மாநில கட்சிகள் பாதிக்கப்படும் என்றும் பாஜகவின் ஜனநாயக விரோத திட்டத்தை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும் என்று இண்டியா கூட்டணி போர்க்கொடி தூக்கியுள்ளது. மக்களாட்சி தத்துவத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பாஜக அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அனைத்து தமிழக கட்சிகளும் கண்டிக்கின்றன.

குறிப்பாக தேசிய முற்போக்கு கூட்டணி ஆளும் ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் மாநில கட்சிகளான பீகார் அரசு, ஆந்திரா அரசு போன்றவை ஒரே நாடு, ஓரே தேர்தல் என்னும் மசோதாவுக்கு ஒத்துழைப்பு வழங்குமா என்பதே மிகப்பெரிய சந்தேகம். மேலும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகாராஷ்ட்ரா அரசு ஏற்றுக் கொள்ளுமா?

இப்போது நாடாளுமன்றத்தில் மோடி – அதானி (மோடானி) விவகாரத்தில் ஜனநாயக வழியில் எதிர்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை எழுப்பி வரும் நிலையில் அதனை மடை மாற்றுவதற்கு இந்த மசோதாவை பாசிச பாஜக கையில் எடுத்துள்ளதோ என்று யூகிக்க தோன்றுகிறது.!! தேர்தல் முறையை மாற்றியமைப்பதென்றால் இந்தியாவிற்கு ஏற்ற விகிதாச்சார பிரதிநிதித்து முறையை ஆலோசிக்கலாம். பல நிலை தேர்தல்களை ஒழித்துக் கட்டுவது சீர்திருத்தம் அல்ல,‌ சீரழிப்பு என்று எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

எப்படியோ அதானி பிரச்னையை திசை திருப்பிட்டாங்கப்பா.

Leave a Comment