என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 55
அக்டோபர் 8ம் தேதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்ன பேசப்போகிறார் என்று தமிழகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அன்றைய தினம் திருக்கழுக்குன்றத்தில் அண்ணா சிலையை திறந்து வைத்துவிட்டு பேசிய எம்.ஜி.ஆர்., ’தி.மு.க.வின் வட்டச்செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்களில் இருந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் கணக்கு காட்ட வேண்டும்’ என்று பேசினார்.
அதற்கு முன்பு கிளக்கழகச் செயலாளர்களும் கணக்கு காட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். பேசியது இல்லை. அக்டோபர் 1 அன்று எம்.ஜி.ஆரிடம் சைதை துரைசாமி, ‘தி.மு.க.வின் கிளைக்கழகச் செயலாளர்கள் எம்.ஜி.ஆர். மன்றங்களை அழிக்கும் சூழ்ச்சியில் துணை நிற்கிறார்கள்’ என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையிலே, ‘வட்டச் செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்களும் சொத்துக்கணக்குக் காட்ட வேண்டும்’ என்று பேசினார்.
தன்னுடைய குரலுக்கு மதிப்பு கொடுத்து புரட்சித்தலைவர் விசாரணை நடத்தி முழு உண்மைகளும் அறிந்துகொண்டார் என்பதில் சைதை துரைசாமிக்கு ரொம்பவே மகிழ்ச்சி.
அன்றைய தினம் லாயிட்ஸ் ரோடு பொதுக்கூட்டத்தில், ‘ஆட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன் நிறுத்தி, அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கி எறிவோம்’’ என்று ஆவேசமாகப் பேசினார்.
- நாளை பார்க்கலாம்.