சிரிச்சிக்கிட்டே சிரி ராஜா

Image

கடி தத்துவம்

மனைவி: ‘‘ஏங்க.. என்னுடைய சமையல் எப்படி இருக்கு, இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?’’

கணவன்: ‘‘சீக்கிரம் உனக்கு என்னோட எல்.ஐ.சி. பணம் கிடைக்கும்.’’

………………

அவன்: ‘‘ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!’’

இவன்: ‘‘ஏன்.. என்ன பிரச்சினை?’’

அவன்: ‘‘எனக்கு இன்னும் வேலை கிடைக்கலை. அதான் பிரச்சினை!!’’

……………………..

இளைஞன் 1 : ‘‘உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?’’

இளைஞன் 2 : ‘‘தெரியலியே!’’

இளைஞன் 1: ‘‘உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.’’

…………………….

தேனு: ‘‘எனக்கு அந்த ஜிகர்தண்டா வாங்கி தர்றதுக்கு  எதுக்கு ஊரு பூராம் சுத்திசுத்திக் கூட்டியாந்திங்க?’’

மானு:  ‘‘நல்லா வெயிலில் சுத்திட்டு வந்து ஜிகர்தண்டா குடிச்சாத்தான் நல்லா இருக்கும்!’’

……………….

சானே: ‘‘சொந்த ஊரு எது?’’

மானே: ‘‘அந்த அளவுக்கு நமக்கு வசதி இல்லீங்க, சொந்த வீடுதான் இருக்கு!’’

……………….

* ஒரு பையன் தன் அப்பாவின் பெயரை பேப்பர்ல எழுதி பிரிட்ஜ்ல வெச்சுட்டான், ஏன் தெரியுமா?

அவங்க அப்பா பெயரை கெடாம பார்த்துக்கறானாம்.

……………

’’டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?’’

’’சுனில் பவுடர்.’’

’’என்ன செண்ட் யூஸ் பண்ணற?’’

‘’சுனில் சென்ட்’’

‘’என்ன ஹேர்ஆயில் யூஸ் பண்ணற?’’

‘’சுனில் ஹேர் ஆயில்’’

‘’ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?’’

‘’இல்லடா, சுனில் என் ரூம் மேட்.’’

…………..

அடடே தத்துவம்!

* தண்ணிக்குள்ள கப்பல் போன ஜாலி… கப்பலுக்குள்ள தண்ணி போன காலி…

* லவர்ஸ் டே அன்னிக்கி லவரை கிஸ் பண்ணலாம்,  ஆனா டீச்சேர்ஸ் டே அன்னிக்கி டீச்சரை கிஸ் பண்ண முடியுமா?

* யானை மேல நாம உட்கார்ந்த சவாரி, யானை நம்ம மேல உட்கார்ந்த ஒப்பாரி!

* காக்கா கா…-கா…ன்னு கத்தறதாலா அதை காக்கா-ம்னு கூப்பிடறோம். ஆனா மாடு மா.. மா…ன்னு கத்தறதால அத மாமா-ன்னு கூப்பிடமுடியுமா !

* க்ரீம் பிஸ்கட்ல க்ரீம் இருக்கும். நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா ?

* தண்ணீரை தண்ணின்னு சொல்லலாம், ஆனா பன்னீரை பன்னின்னு சொல்ல முடியுமா ?

Leave a Comment