• Home
  • அரசியல்
  • ஜவ்வாக இழுக்கும் சவுக்கு சங்கர் விவகாரம்

ஜவ்வாக இழுக்கும் சவுக்கு சங்கர் விவகாரம்

Image

குண்டர் சட்டத்துக்கு தடை சிக்கல்

பெண் காவலர்களை தவறாக பேசிய விவகாரத்தில் தன் மீது பதிவான 17 வழக்குகள் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி பிரபல யூ-டியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சவுக்கு சங்கர் பேச்சால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது என்று போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீதிமன்றம் கடுமையாக கண்டித்து விடுதலை செய்தது. அதனால், போதை வழக்கில் அவருக்கு மீண்டும் ஒரு முறை குண்டர் சட்டம் போடப்பட்டது. ஆகவே, இதுவும் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும் என்ற கருத்து நிலவியது.

ஆனால், இப்போது வலுவான சட்டத்தில் குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பதால் விடுதலை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இதையடுத்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த மனு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

அதோடு மதுரையில் இருந்து தன்னை சென்னை சிறைக்கு மீண்டும் மாற்ற வேண்டும் என்றும் சென்னை சிறையில் படிப்பதற்கு போதுமான அளவு புத்தகங்கள் இருப்பதாகவும் எனவே அதனை மனதில் கொண்டாவது தன்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் சார்பில் கோரிக்கை வரும் திங்கட்கிழமை இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர்.

என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Leave a Comment