• Home
  • அரசியல்
  • பெண்களிடம் இனி யாரும் வாலாட்ட முடியாது…

பெண்களிடம் இனி யாரும் வாலாட்ட முடியாது…

Image

ஸ்டாலின் கடுமையான சட்டங்கள்

சட்டங்கள் கடுமையானால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது. இதனை நிறைவேற்றும் வகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்களுக்கு எதிராக இன்று சட்டசபையில் கடுமையான சட்டத்திருத்தம் முதல்வர் ஸ்டாலினால் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிவோர் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்டவர் நிரூபிக்கப்பட்டால் மரணிக்கும் வரை சிறையிலிருக்கும் வகையில் தண்டனை கொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் ஈடுபடுபவருக்கும் மரண தண்டனை வழங்க வழிவகை செய்யப்படும். கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள் தண்டனையில் இருந்து மரண தண்டனை கொடுக்கப்படும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதோடு, காவல் துறை ஊழியர் அல்லது அவரது நெருங்கிய உறவினர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடுபவர்கள், எஃப்.ஐ.ஆர். வெளியிடுபவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். பெண்ணை பின் தொடர்ந்தார் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றைக்குத் தேவையான சட்டத் திருத்தம் இது.

Leave a Comment