• Home
  • அரசியல்
  • வானதியை புறக்கணிக்கும் நிர்மலா சீதாராமன்..?

வானதியை புறக்கணிக்கும் நிர்மலா சீதாராமன்..?

Image

காரணம் இது தானா..?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தான் இருக்கிறார். பல்வேறு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் வானதி சீனிவாசனை தள்ளி வைத்துவிட்டாராம். இதையடுத்து தேசிய அரசியலுக்கு அடி போடுகிறார் வானதி.

அன்னபூர்ணா சந்திப்பு விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் அவமானத்தை சந்தித்து, அது இந்தியா முழுக்கவே எதிரொலித்தது. இதில் நிர்மலா சீதாராமன் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார். வானதி சீனிவாசன் திட்டமிட்டு சந்திப்பு நடத்தியதாகவும், வீடியோ வெளியாக அவரே காரணம் என்றும் நினைத்து தள்ளி வைத்திருக்கிறார்.

வானதியின் சமாதானம் எடுபடவில்லை. இதையடுத்து டெல்லி தலைவர்களைப் பிடித்து அடுத்தகட்ட நகர்வுக்குப் பிளான் போடுகிறார் வானதி. அதனாலே நேரடியாக ராகுல் காந்தி எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார். இதையடுத்து இன்று வானதி, ‘’ஹரியானாவில் இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ஸ்ரத்ரோர், சில தினங்களுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த மூத்த பெண் தலைவரான திருமதி. சிமி ரோஸ் பெல் அவர்களும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே “Casting Couch” என்ற பாலியல் கொடுமை நடைபெறுவதாக குற்றம் சாட்டியதும், அதன்பின் அவர் கட்சியை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டதும் நாம் அறிந்ததே. இவ்வாறு, உங்கள் சொந்த கட்சிக்குள் பாலியல் புகார் வைத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு சென்று “பெண்ணுரிமை” பற்றி வாய் வலிக்க பேசுகிறார் ராகுல் காந்தி.

பெண்களின் உடல் அழகைப் பார்த்து தேர்தல்களில் சீட்டு வழங்கும் உங்கள் கட்சிக்கு, “பெண்களின் பாதுகாப்பு” பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? பாலியல் கொடுமையை மூடி மறைப்பதும், மீறி வாய் திறந்தால், உடனே கட்சியை விட்டு நீக்குவதும் தான் உங்கள் பாரம்பரிய கொள்கையா? “பெண் அமைச்சர் அடக்கமாக இருக்க வேண்டும்” என்று பெண் அடிமைத்தனத்தை பொதுவில் பறைசாற்றிய தமிழக காங்கிரஸ் இவிகேஎஸ்.இளங்கோவனை கட்சியில் வைத்துக் கொண்டு, பெண்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உங்களால் எப்படி உறுதிசெய்ய முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இளங்கோவன் என்ன எகிறப் போகிறாரோ..?

Leave a Comment