விமான டிக்கெட்டில் புது வகை ஊழல்…

Image

நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய தி.மு.க.

விமான டிக்கெட் பதிவு செய்வதில் ஒரு புது வகையிலான ஊழல் நடப்பதாக தி.மு.க. எம்.பி.யான தயாநிதி மாறன் மக்களவையில் ஆதாரத்துடன் புகார் தெரிவித்திருக்கிறார்.

மக்களவையில் பேசிய தயாநிதி மாறன், ‘’நான் விஸ்தாரா விமான நிறுவனத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்கிறேன். இது டாடா நிறுவனத்தின் கீழ் உள்ளது. அவர்கள் TCS மென்பொருளைப் பயன்படுத்துகிறார்கள்.

நான் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தபோது, ​​ சென்னையில் இருந்து டெல்லிக்கு ஒரு வழி டிக்கெட்டுக்கு 33 ஆயிரம் ரூபாய் என்று காட்டியது. நான் பணம் செலுத்தச் சென்றபோது Error மெசேஜ் காட்டியது. அந்த மெசேஜ் வந்தவுடனே அடுத்த சில நொடிகளில் விமான டிக்கெட் விலை ரூ.93 ஆயிரம் என்று காட்டியது. இது மென்பொருள் துணையுடன் நடக்கும் ஒரு சதி.. புதுவகை ஊழல்…!

இது பலமுறை நடக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் சாப்ட்வேரில் டாடா நிறுவனத்துக்கு ஏகபோக ஆதிக்கம் இருப்பதால் இப்படி நடக்கிறது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு அமைச்சரிடம் கோருகிறேன்.” என்று கூறினார்.

தயாநிதி மாறன் சொன்ன தகவல் அவையில் அதிர்ச்சியைக் கிளப்பியது. பல உறுப்பினர்கள் கவலையைப் பகிர்ந்துகொண்டனர். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஒன்றிய அரசு ஒருபக்கம் வரிகளை உயர்த்திக் கொண்டே இருக்க, ஒன்றிய அரசின் சேவைகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி வைத்திருக்கும் டாட்டா, அதானி, அம்பானி போன்ற ஏகபோக நிறுவனங்களும் மக்கள் மீது மோசடிகளை அரங்கேற்றிக்கொண்டே இருக்கிறார்கள்..!

இப்படியும் கொள்ளை நடக்கிறதா என்று மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Leave a Comment