என்ன செய்தார் சைதை துரைசாமி – 295
குப்பை மேலாண்மையைக் கையாள்வதற்கு மாநகராட்சி ஊழியர்கள் திணறுவதைக் கண்கூடாகப் பார்த்தார் மேயர் சைதை துரைசாமி. ஆட்கள் பற்றாக்குறை, வாகனப் பற்றாக்குறை, சுகாதார சாதனங்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு குறைகளுடன் மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை அகற்றி வருகிறார்கள். இதனை தனியாரிடம் கொடுப்பதன் மூலம் அல்லது கூடுதல் ஆட்கள் நியமித்தாலும் முழு பிரச்னையும் தீர்ந்துவிடாது என்பதால், இதனை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு புதிய திட்டத்தை வகுத்தார்.
ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிக்கு அமர்த்தி, சாதிக்க முடியாத குப்பை பிரச்னையை எளிதாகக் கட்டுப்படுத்த வித்தியாசமான ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அதாவது, மாநகராட்சி சார்பில் தெருவின் நீளத்துக்கு ஏற்ப ஒன்று அல்லது பல்வேறு எண்ணிக்கையில் கடைகள் உருவாக்கித் தரப்படும் என்பதே புதிய தீர்வு.
அதாவது, மாநகராட்சி உருவாக்கும் கடைகளை நடத்த விரும்புபவர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை விதிக்கப்படும். அதாவது, அந்தத் தெருவை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளையும் சுத்தமாக பராமரிக்க வேண்டியது அந்த கடைக்காரரின் பணி. அந்தப் பணியை அவர் சிறப்பாக செய்யவேண்டும் என்பதற்காக, எந்த வாடகையும் இல்லாமல் கடை நடத்தும் உரிமை வழங்கப்படும்.
ஒரே ஒரு தெரு மட்டுமே கடைக்காரரின் பொறுப்பில் வழங்கப்படும் என்பதால், அதனை கவனிப்பதும், குப்பையை மேலாண்மை செய்வதும் மிகவும் எளிதாக இருக்கும் என்று திட்டமிட்டார். அதோடு, குப்பை மேலாண்மை செய்வதற்கு மாநகராட்சி ஊழியர்கள் உதவி செய்வார்கள். எனவே, அவர்களால் எளிதாக அந்த தெருவை சுத்தமாக வைத்திருக்க முடியும். மைக்ரோ லெவல் மேனேஜ்மென்ட் என்பதால், குப்பை இருந்தால் உடனடியாக கண்காணித்து அகற்றிவிட முடியும் என்று திட்டமிட்டார்.
இதன் மூலம் ஒரு குடும்பம் பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி அடையும் என்றும் திட்டமிட்டார்.
- நாளை பார்க்கலாம்.