சீமானுக்கு எதிராக புதிய கட்சி

Image

ஆடியோ, வீடியோ வெளிவரப் போகுதாம்

சீமான் கட்சியில் இருந்து அவ்வப்போது நிர்வாகிகள் வெளியேற்றப்படும் நிலையில், சிலர் வெளியேறவும் செய்கிறார்கள். இப்படி நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து, ‘புரட்சித் தமிழர் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார்கள்.

இன்று சென்னையில் புதிய கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்து வைத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது சீமான் பற்றி ஒருசில தகவல்களை முன்னோட்டமாக அறிவித்தார்கள்.

அதாவது, 2011 தேர்தலுக்கு சசிகலாவிடம் ₹11 கோடியை சீமான் வாங்கினார்! என்று தெரிவித்தனர். அந்த விசுவாசத்திற்காகவே சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் என்று கூறினார்கள்.

உலகத் தமிழர்களின் திரள் நிதியின் மூலம் சீமானுக்கு அதிகளவு வருவாய் கிடைக்கிறது. சீமான் பெயரிலும் மற்றும் மனைவியின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கி வைத்துள்ளார்.

இது தவிர ஒவ்வொரு தேர்தல் காலங்களில் பல கட்சிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு வேட்பாளரை அறிவிப்பார் காசுக்காக எதையும் செய்யக்கூடியவர் சீமான் என்று தெரிவித்திருக்கிறார். விரைவில் இவர்கள் கட்சியில் இருந்து சீமான் பற்றி ஆடியோ, வீடியோ வெளிவரும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

அதேநேரம் நாம் தமிழர் கட்சியினர், ‘’தி.மு.க.வினர் தூண்டுதலில் சீமானை அம்பலப்படுத்த ஒரு கட்சி தொடங்கியிருக்கிறது. இவர்கள் என்ன செய்தாலும் அண்ணன் சீமான் புகழுக்கு ஆபத்து வராது’’ என்கிறார்கள்.

Leave a Comment