என்ன செய்தார் சைதை துரைசாமி – 177
எந்த ஒரு வேலை என்றாலும் அதனை விரைந்து முடித்துவிட வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி அவசரம் காட்டுவதில்லை. இதனை எப்படியெல்லாம் சிறப்பாகவும் மேன்மையாகவும் செய்யலாம் என்று தெளிவாக ஆய்வு செய்தபிறகே செயல்படுத்துவார். அப்படித் தான் திருக்குறள் ஒலிபரப்பு சாத்தியமில்லை என்று பலரும் கருதிய நேரத்தில், மிகத்தெளிவாக திருக்குறளையும், விளக்கத்தையும் உச்சரிக்கச் செய்து, அனைவரும் ரசித்துக் கேட்கும் வகையில் ஒலிக்கச் செய்தார்.
இசையைக் கேட்டு மயங்கிய மக்கள் அடுத்தகட்டமாக திருக்குறளையும் அதன் விளக்கத்தையும் கேட்டு ரசித்து பிரமித்தார்கள். பூங்காவிற்கு விளையாட வரும் மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒலிபரப்பு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. தங்களுக்குத் தெரிந்த திருக்குறள் என்றால் மாணவர்களும் சேர்ந்தே குறள் சொல்லி மகிழ்ந்தார்கள்.
சைதை துரைசாமியின் இந்த முயற்சிக்கு பெற்றோர் மட்டுமின்றி ஆன்றோர்களும், சான்றோர்களும் பெரும் பாராட்டு தெரிவித்தார்கள். அறிவுரை சொல்வதால் பயன் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பாராமல், மக்களிடம் முடிந்தவரை நல்ல கருத்துக்களை கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்ற சைதை துரைசாமியின் எண்ணத்துக்கு மக்களும் பேராதரவு கொடுத்தார்கள்.
பூங்காவில் மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட சின்னச்சின்ன மாற்றங்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதாவது நடைபயிற்சி மேற்கொள்ளும் அனைவருக்கும் தாங்கள் எத்தனை தூரம் நடந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள விரும்புவார்கள். ஸ்மார்ட் வாட்ச் கட்டியிருக்கும் நபர்கள் வேண்டுமானால் தாங்கள் நடந்த தூரத்தை வாட்ச் மூலம் கணக்கிட்டு அறிந்துகொள்ளலாம். மற்றவர்களுக்கு அது சாத்தியமில்லை. எனவே, இதனை அனைவருக்கும் சாத்தியமாக்க விரும்பினார் மேயர் சைதை துரைசாமி.
பூங்கா சுற்றுவட்டப் பாதையை அளந்து 100 மீட்டர், 200 மீட்டர் என்று ஆங்காங்கு அறிவிப்புப் பலகை வைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இது, நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு அதிக உற்சாகம் கொடுத்தது. நேற்றைய தினத்தை விட இன்று கூடுதலாக நடக்கலாம் என்று கணக்குப் போட்டு நடப்பதற்கும் வழிவகை செய்தது. இதுபோன்ற சின்னச்சின்ன மாற்றங்களும் சைதை துரைசாமிக்குப் பாராட்டு பெற்றுக் கொடுத்தது.
- நாளை பார்க்கலாம்.