விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா
போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம். நிலத் தகராறு, பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள் குறித்து இந்திய வழக்கறிஞர் சங்கம் விழிப்புணர்வு தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வழங்கிய முக்கியமான தீர்ப்புகளையும் எப்படிப்பட்ட மாற்றங்கள் வந்துள்ளன என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.
நில நிர்வாக ஆணையர் – கடித எண் – K3/27160/2018, dt – 13.3.2018
சென்னை உயர்நீதிமன்றம் – W. P. No – 24839/2014, dt – 16.7.2018
W. P. No – 491/2012, dt – 4.6.2014
W. P. No – 16294/2012, dt – 4.4.2014
2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால், அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும். மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.
S. A. No – 313 & 314/2008, dt – 11.2.2019
3. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். தவறு செய்யும் விஏஓக்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
W. P. No – 13916/2019, dt – 1.7.2019
4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது. உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.
W. P. No – 18489/2009, dt – 1.7.2011
5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.
S. A. No – 84/2006, dt – 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்
6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.
S. A. No – 2060/2001, dt – 2.11.2012
S. A. No – 1715/1989, dt – 25.6.2002
W. P. No – 16294/2012, dt – 3.4.2014
7. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
Madras High Court W. P. No – 18754, 20304, 2613/2005 DT – 4.11.2013
A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 – 3 – CTC – 270)
The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 – 2 – CTC – 315)
8. பட்டா பெயர் மாற்றம் செய்ய நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும்.
W. P. No – 19428/2020, dt – 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)
9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
W. P. No – 11279/2015, dt – 22.3.2019, madurai high court
10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா் பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.
T. R. தினகரன் Vs RDO (2012 – 3 – CTC – 823)
அம்சவேணி Vs DRO மதுரை. W. P No – 16294/2012…
- ஜிஜி லீகல் ஃபர்ம், சென்னை. தொடர்புக்கு : 7299753999