பிறந்த நாள் சிந்தனை
ஜவஹர்லால் நேருக்கு மதத் தலைவர்களை சந்தித்துப் பேசுவதற்கு பொதுவாக விருப்பம் காட்ட மாட்டார். ஆனால், மிகவும் கட்டாயப்படுத்தி ஒரு சாமியார் பிரதமராக இருந்த நேருவை சந்திக்க வந்தார்.
அவருக்கு மொத்தமே 10 நிமிடங்கள் மட்டுமே சந்திப்புக்கு நேரம் ஒதுக்கினார் நேரு. அதன்படி நேருவை சந்திக்க வந்த சாமியார், பிரதமரை ஆச்சர்யப்படுத்த நினைத்தார்.
எனவே, அறைக்குள் நுழைந்ததும் நேருவிடம் தன் சக்தியைக் காட்ட விரும்பினார். எனவே நேருக்கு அருகில் நின்று, சில மந்திரங்கள் சொல்லிவிட்டு, காற்றிலிருந்து ஒரு மாலையை வரவழைத்து நேருக்குப் போட முயன்றார்.
அதை பார்த்ததும் நேரு சட்டென்று எழுந்து, ‘’சாமியார் என்று நினைத்தால் ஒரு மேஜிக்காரனை வரச்சொல்லியிருக்கிறீர்கள். நான்சென்ஸ்’ என்று வெளியே விரட்டி விட்டார்.
10 நிமிடங்கள் நடப்பதாக இருந்த சந்திப்பு மொத்தமே 10 வினாடிகளில் முடிந்துபோனது. ஆட்சிக்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்ற சிந்தனையாலே நவீன இந்தியாவை கட்டிக்காத்தார்.
இன்று நேருவின் சிந்தனைகளைத் தாண்டி ராமர் கோவில், சீதா கோவில் கட்டுவதையே ஆட்சியின் லட்சியமாகக் கொண்டுள்ள அரசு ஆள்கிறது.












