வீடு தோறும் நிலவேம்புக் கஷாயம்

என்ன செய்தார் சைதை துரைசாமி 426

டெங்கு அச்சத்தைத் தணிக்க வேண்டும் என்றால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் கஷாயமும், பப்பாளி இலைச்சாறும் கிடைக்கவேண்டும் என்று திட்டமிட்டு, அதை செயல்படுத்திக் காட்டினார் மேயர் சைதை துரைசாமி.

அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி  அம்மா உணவகம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையம் போன்று மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கஷாயம் இலவசமாக வழங்கப்பட்டன. ஒருசில இடங்களில் சித்த மருத்துவர்கள் முன்னிலையில், கஷாயம் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

மக்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வை அடுத்து தனியார் மருத்துவமனைகளும் நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின. இது பக்கவிளைவு இல்லாதது என்பதால் குடும்பத்தில் அனைவரும் ஆர்வமுடன் கஷாயம் குடிக்கத் தொடங்கினார்கள்.

நாட்டு மருந்துக் கடைகளில் நிலவேம்பு வாங்கி வீடுகளில் கஷாயம் போட்டுக் குடிக்கும் பழக்கமும் அதிகரித்தது. அதோடு, டெங்கு தவிர மற்ற நோய்களுக்கும் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்துவதற்கு மக்கள் ஆர்வமாக முன்வந்தார்கள்.

சித்த வைத்தியம் பற்றி போதிய தெளிவு இல்லாதவர்களும், இதனை பயன்படுத்தாத நபர்களும் இவற்றை எடுத்துக்கொள்ள முன்வந்தார்கள். இதனை குடித்தால் நோய் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றதும் குடும்பத்தில் அத்தனை பேரும் எடுத்துக்கொண்டார்கள். இதன் மூலம் சித்த வைத்தியத்தின் பெருமையை தமிழகத்துக்கு மீட்டுக் கொடுத்த பெருமை மேயர் சைதை துரைசாமிக்குக் கிடைத்தது.

 – நாளை பார்க்கலாம்.

Leave a Comment