டெங்குக்கு நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி 419

டெங்குக்கு மருந்து இல்லை என்று ஆங்கில மருத்துவர்கள் கை விரித்தாலும் சித்த வைத்தியம் மீது நம்பிக்கை வைத்து, சித்த வைத்தியர்களிடம் மருந்து தேடினார் மேயர் சைதை துரைசாமி. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.

சித்த வைத்தியத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரண்டு மருந்துகள் இருக்கின்றன என்று மகிழ்ச்சியான தகவலை சித்த வைத்தியர்கள் தெரிவித்தார்கள். அதிக செலவு வைக்காத நிலவேம்புக் கஷாயம் மற்றும் பப்பாளி இலை சாறு ஆகிய இரண்டும் டெங்கு நோயை முழுமையாகக் குணப்படுத்தும் என்று உறுதியாகச் சொன்னார்கள்.

மேயர் சைதை துரைசாமிக்கு சித்த மருந்துகள் மீது முழு நம்பிக்கை இருந்தாலும், பொதுமக்கள் ஆரோக்கியத்தில் தனது நம்பிக்கை மட்டும் போதாது என்று நினைத்தார். அதாவது, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச் சாறுக்கு மக்கள் முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு மட்டுமே ஆங்கில மருத்துவம் இந்தியாவுக்கு அறிமுகமானது. அதுவரையிலும் சித்த வைத்தியர்களே அனைத்து நோய்களையும் குணப்படுத்தி வந்தனர். மக்களும் சித்த வைத்தியர்கள் மீது முழு நம்பிக்கை வைத்தார்கள். எனவே, நோய்களும் குணமானது. அதேபோன்று ஒரு நம்பிக்கை இப்போதும் மக்களுக்கு வர வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி விரும்பினார். இதற்கு என்ன செய்வது தீவிரமாக ஆலோசனை செய்தார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment