• Home
  • யாக்கை
  • ரத்தக்குழாய் அடைப்புக்கு இயற்கை தீர்வு..!

ரத்தக்குழாய் அடைப்புக்கு இயற்கை தீர்வு..!

Image

உணவே மருந்து

வீட்டுக்கு தண்ணீர் வரும் குழாயில் அவ்வப்போது உப்பு அல்லது பாசி படிந்து தண்ணீர் வரத்து குறைவது, நின்று போவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான், ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்போது ரத்தக் குழாயின் உட்பக்கமாக கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக்கொள்கிறது. இதனால் ரத்தக் குழாயின் உள்விட்டம் சுருங்கி அடைத்துவிடுகிறது. இதை ‘ரத்தக்குழாய் அடைப்பு’ Atherosclerosis) என்கிறோம். இதனால் ரத்தக்குழாயில் ரத்தம் பாய்வது குறைந்துபோவதால், உறுப்புகளுக்குத் தேவையான ரத்தமும் ஆக்சிஜனும் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, மாரடைப்பு, பக்க வாதம் போன்ற பல்வேறு பிரச்னைகள்  ஏற்படுகின்றன.

இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கின்றது. இந்த பிரச்சனக்கு முக்கிய காரணமாக இருப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கங்கள் போன்றவைதான். அதனால், உரிய நேரத்தில் அளவோடு சாப்பிட வேண்டும். எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. நேரமில்லை என்றால், இரவிலும் உடற்பயிற்சி செய்யலாம். மன அழுத்தம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்; அதற்கு யோகா, தியானம் நல்ல பலன் தரும்.

பொதுவாக மருந்து, மாத்திரைகள் மூலமே குணப்படுத்திவிட முடியும். நீண்ட நாட்கள் கவனிக்கவில்லை என்றால் ஆபரேஷன் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும். இப்பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தமனிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒருசில உணவுகளை அன்றாடம் சாப்பிட்டால், நிச்சயம் இதைத் தவிர்க்கலாம்.

குறிப்பாக உணவில் பூண்டு சேர்த்தால், முதுமையில் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எனவே தினமும் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். அதேபோன்று, மாதுளை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் தமனிகளில் ப்ளேக் உருவாக்கத்தின் அபாயத்தையும் குறைக்கும். ஆகவே அடிக்கடி மாதுளையை சாப்பிடலாம்.

சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது, இரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் தமனிகளில் இரத்த உறைவைக் குறைக்கிறது. மேலும் அடிக்கடி சால்மன் மீனை சாப்பிட்டால், இரத்த அழுத்தமும் குறையும்.

மஞ்சள் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் மற்றும் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே தமனிகள் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் கலந்த பாலைக் குடியுங்கள்.

ஆலிவ் ஆயில் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவே அன்றாட சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்துக் கொள்ளலாம்.

Leave a Comment