என்ன செய்தார் சைதை துரைசாமி – 442
2015 சென்னை பெருவெள்ளம் வரும் முன்னரே பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டன என்று சென்னை பெருமன்றத்தில் விளக்கமாகப் பேசினார் மேயர் சைதை துரைசாமி.
மாநகராட்சி எதுவுமே செய்யவில்லை என்று புலம்பிய எதிர்க்கட்சிகளை வாயடைக்க வைத்த மேயர் சைதை துரைசாமியின் பேச்சு தொடர்கிறது
‘’மழைக்கால முன்னெச்சரிக்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மற்றும் முக்கியமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படன.
அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு படை, சென்ற ஆண்டு மழையின்போது சிறப்பாக பணியாற்றி மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது. இந்த ஆண்டும் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முன்கூட்டியே அவர்களிடம் கேட்கப்பட்டது.
மழை மற்றும் வானிலை நிலவரங்கள் மாநகராட்சிக்கு முன் கூட்டியே தெரிவிக்குமாறு வானிலை ஆராய்ச்சி நிலையத்திடம் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளப்பட்டது. கழிவுநீரேற்று நிலையங்களில் தேவையான மோட்டார் பம்பு செட்டுகள், ஜெனரேட்டர் மற்றும் அதற்கு தேவையான டீசல்/பெட்ரோல் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல் மழைக் காலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு தகுந்த கண்காணிப்பு பணி முன்கூட்டியே தீவிரப்படுத்தப்பட்டது. இது தவிர ஏதாவது இடத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பது தெரிய வந்தால் உடனடியாகக் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அந்த இடங்களில் லாரி மூலம் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்காலத்தில் குடிநீரில் போதுமான அளவு குளோரின் இருப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற தனியார்களிடமிருந்து தருவிக்கப்பட்ட மோட்டார் பம்ப் செட்கள் தயார் நிலையில் வைத்திருக்க சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது…’’ என்று தொடர்ந்தார்.
- நாளை பார்க்கலாம்
