பிள்ளையின் நடவடிக்கை அச்சம் தருகிறது, எப்படி திருத்துவது?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : சுயபுத்தியும், சொல்புத்தியும் வாழ்க்கையை வளமாக்குமா..?

  • எஸ்.கவிதா, பாண்டியன்நகர்.

ஞானகுரு :

சுயபுத்தி வேலை செய்யத் தொடங்கிவிட்டால், அங்கே சொல்புத்திக்கு அவசியம் இல்லை. தனக்கு சுயபுத்தி சரியாக இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அறிவதுதான் முதல் தெளிவு.

கேள்வி : என் பையனின் நடவடிக்கையைப் பார்த்தால் அவன் எதிர்காலம் பாழாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. என்ன செய்வது..?

  • டி.வாணிச்சந்திரன், என்.ஜி.ஓ. காலனி

ஞானகுரு :

இந்த எதிர்மறை எண்ணமே பிள்ளையின் வாழ்க்கையை சிதைத்துவிடலாம். சிக்கலான மனநிலையில் இருந்து பிள்ளை மீண்டுவிடுவான் என்று நம்பிக்கை வையுங்கள். ‘நீ மிகவும் நல்ல பிள்ளை, ஏன் இப்படிப்பட்ட தவறுகள் உன் வாழ்வில் நடக்க வேண்டும்… நீ நல்ல வண்ணம் வாழலாம்..’ என்று நம்பிக்கை ஒளியூட்டுங்கள். அதேநேரம் மீண்டும் மீண்டும் பிள்ளை தவறு செய்யும்போது மிக உறுதியுடன் தண்டிக்கவும் கண்டிக்கவும் செய்யுங்கள். சொன்ன பேச்சு கேட்பதில்லை என்று பிள்ளையை தள்ளிவைத்தால், நாளை நீதிமன்றமும் காவல் துறையும் தண்டிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். 

Leave a Comment