மிஸ்டர் குடிகாரர் ஜோக்ஸ்

Image

குலுங்கி குலுங்கி சிரிங்க

குடிகார முனுசாமியின் மீது தண்ணீரை தெளித்து ஆசிர்வதித்தார், பாதிரியார்
கூறினார்…
‘‘உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டன. இன்று முதல் நீ பரிசுத்தமானவனாகிறாய்.  இனி உன் பெயர் ‘மோசஸ்’. அதனால்  இனிமேல்
குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்துகொடு…””
‘‘சத்தியமா குடிக்க மாட்டேன் ஃபாதர்…  ஆனா, சாராயத்துக்குப் பதிலா சர்பத் குடிக்கலாமா  ஃபாதர்?’’
‘‘ஓ…. தாராளமாக எத்தனை தடவை வேணும்னாலும் குடிக்கலாம்!’’
‘‘ஓகே ஃபாதர் !’’
மோசஸ் ஆன குடிகார முனுசாமி உடனே தன்னுடைய வீட்டுக்கு வந்து, அலமாரியில் இருந்த ஒரு பாட்டில் விஸ்கியை எடுத்தான். அதன் மீது தண்ணீரை தெளித்து, ‘‘உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவப்பட்டன. நீ பரிசுத்தமானவனாகிவிட்டாய். இன்று முதல் நீ ‘சர்பத்’ என்றழைக்கப்படுவாய், என்றபடி குடிக்கத் தொடங்கினான்.

………………………………….

’’ஃபுல் பாட்டில் விஸ்கியை குடிச்சுட்டு ஏன் இப்படி தள்ளாடணும். கொஞ்சமா குடிக்கலாமே.’’

‘’என் நிலைமை அப்படி ஆகிப்போச்சு’’

‘’அப்படி என்னங்க நிலைமை?””

‘’பாட்டில் மூடி தொலைஞ்சு போச்சுங்க…”

……………………….

’’நீங்க கவலையால குடிக்கிறீங்கன்னு கேள்விப்பட்டேன், அப்படி என்ன கவலை நண்பா..?”

‘’ரொம்பவும் குடிக்கிறேனேங்கிற கவலைதான்”

…………………………

‘’டாக்டர், குடிச்சுக்குடிச்சு இப்போ கையெல்லாம் நடுங்குது…”

‘’சரி, உடனே குடியை நிறுத்த மருந்து கொடுக்கிறேன்’’

‘’டாக்டர், கை நடுங்குறதை மட்டும் நிறுத்துங்க போதும், சரக்கெல்லாம் வீணா கீழே சிந்துது”

டாக்டர் : ???

………………………

’’ஹலோ போலீஸ் ஸ்டேஷனா… என் பொண்டாட்டி அரசாங்கத்துக்கு எதிரா வேலை செய்றா, வந்து பிடிச்சுட்டு போங்க சார்..”

‘’அப்படி என்ன செஞ்சாங்க..”

‘’டாஸ்மாக் சரக்கை குடிக்கக்கூடாதுன்னு தொந்தரவு பண்றா சார்””

Leave a Comment