காச நோயாளிகளுக்கு மாத உதவித் தொகை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 124

சென்னை பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி பதவி ஏற்றுக்கொண்டதும் பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மேற்கொண்ட ஆரோக்கிய சீர்திருத்தங்களில் மிகவும் முக்கியமானது, காச நோயாளிகளுக்கு மாத உதவித் தொகை அறிமுகம் செய்தது ஆகும்.

உலக அளவில் காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக நம் இந்திய உள்ளது. உலக சுகாதார அமைப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் மக்களும் இந்தியாவில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேரும் உயிர் இழக்கிறார்கள். இந்த நோய் மறைந்திருந்து தாக்கும் நோய் என்பதால் ஆரம்ப கட்டத்திலேயே நிறைய பேர் இதனை அறிவதில்லை. மேலும், இது எளிதில் பரவக்கூடிய நோயாகவும் இருக்கிறது என்பதால் ஒரே நேரத்தில் குடும்பத்தில் பலரும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.  

காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட காலம் சிகிச்சை தேவைப்படும். அதேநேரம், போதிய ஓய்வும் ஆரோக்கியமான உணவும் எடுத்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம். குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே, காச நோயின் பாதிப்பிலிருந்து முழுமையாக வெளியேற முடியும்.

இந்த நிலையில் காச நோய்க்கு ஆளான ஏழைகள் பொருளாதாரச் சுமையை தாங்க முடியாமல் அவஸ்தைப்படுவதை அறிந்தார் மேயர் சைதை துரைசாமி. இதையடுத்து காச நோயினால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு உதவும் வகையில் மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கு திட்டம் உருவாக்கி உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவந்தார். இந்த வகையில் காச நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

அது மட்டுமின்றி, காச நோயாளிகள் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு சாப்பிடுவதற்கும் ஏற்பாடு செய்தார். இதன் மூலம் காச நோயாளிகள் வீட்டில் ஓய்வாக இருந்து நோயின் தாக்கத்தில் இருந்து மீள முடிந்தது. அதனால், வெளி நபர்களுக்கு காச நோய் பரவுவதும் கட்டுப்படுத்தப்பட்டது.

இப்படியொரு மனிதநேய சிந்தனை மேயர் சைதை துரைசாமியைத் தவிர வேறு யாருக்கும் வந்ததே இல்லை என்று காச நோயாளிகள் மட்டுமின்றி மருத்துவர்களும் மனதாரப் பாராட்டினார்கள்.

  • நாளை பார்க்கலாம்.  

Leave a Comment