கம்பீர ஆண்கள் உடையும் தருணங்கள்

5 சம்பவங்கள்

ஆண் என்றாலே கம்பீரம், ஆண் என்றாலே வலிமை, ஆண் என்றாலே உறுதி என்பதெல்லாம் உண்மை அல்ல. எப்படிப்பட்ட ஆண் மகனையும் இந்த 5 சம்பவங்கள் உலுக்கிவிடும் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.

  1. நெருங்கிய நண்பரின் துரோகம் பெரும்பாலான ஆண்களை மீளமுடியாத அளவுக்கு அதிர்ச்சியில் ஆழ்த்திவிடுகிறது.
  2. தந்தையின் மரணம் ஆண் மனதில் நிரந்தர வலி உருவாக்குகிறது. தாயின் மரணத்தை விட தந்தையின் மரணமே ஆணை மிகவும் பாதிக்கிறது.
  3. பிள்ளைகளின் குறைந்தபட்ச ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையை மிகப்பெரும் துன்பமாகக் கருதுகிறார்கள்.
  4. பிரச்னையை தீர்ப்பதற்கு வேறு யாரும் வரவே மாட்டார்கள் என்ற உண்மை முதன்முதலாகப் புரியும்போது பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.
  5. உணவுக்கும், இயற்கை உபாதை கழிப்பதற்கும் வேறு ஒருவரது உதவிக்கு காத்திருப்பதை ஆண்களால் தாங்கிக்கொள்ள முடிவதே இல்லை

இந்த பிரச்னைகளுக்கு முன்பு பணம் நஷ்டம், காதல் தோல்வி, நோய் போன்றவை எல்லாம் ஆண்களுக்கு சாதாரண விஷயம் தான். பிரச்னைகளால் ஆண்கள் நொறுங்கிப் போனாலும் தங்கள் சோகத்தை வெளியே காட்ட மாட்டார்கள். எனவே, இந்த தருணங்களில் குடும்பத்தினர் ஆறுதலாகவும் துணையாகவும் நிற்க வேண்டியது அவசியம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment