• Home
  • அரசியல்
  • ராகுல் காந்திக்கு மரியாதை தர மோடிக்கு நிர்ப்பந்தம்

ராகுல் காந்திக்கு மரியாதை தர மோடிக்கு நிர்ப்பந்தம்

Image

காலம் கற்பிக்கும் பாடம்.

எந்த ராகுல் காந்தியின் எம்.பி.யை பறித்து, வீட்டை பறித்து வெளியே அனுப்பினார்களோ, பேச அனுமதி கொடுக்காமல் விரட்டியடித்தார்களோ… அதே ராகுல் காந்தியை அழைத்துக்கொண்டு சபாநாயகரை பதவியில் அமர்த்தவேண்டிய கட்டாயம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டது காலத்தின் கட்டாயம்.

இன்று 18வது மக்களவை சபாநாயகர் தேர்வு நடக்க இருந்த நிலையில், நேற்று இரவு மிகக் கச்சிதமாக காங்கிரஸ் காய் நகர்த்தி ராகுலை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கி மோடிக்கு சரிசமமாக நிற்க வைத்து பாஜகவுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது.

இதையடுத்து மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சேர்ந்து அழைத்துச்சென்று இருக்கையில் அமர வைத்து அவரை வாழ்த்தினர்.

முதல் முறையாக ராகுல் காந்தியை தக்க மரியாதையுடன் மோடி மேடைக்கு அழைத்து செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சபாநாயகர் பதவி ஏற்புக்குப் பிறகு பேசிய ராகுல் காந்தி, ‘முன்பு போன்று இல்லாமல் இந்திய மக்களின் குரலாக இங்கே வந்திருக்கிற எதிர்க் கட்சியினரை பேச அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகிறேன்” என்று முதல் பேச்சியிலே ஊசி ஏற்றியிருக்கிரார்.

இம்முறை ஐந்தாண்டுகளும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு செவி சாய்த்து ஆக வேண்டும் எந்த சட்டத்தையும் தான் தோன்றித்தனமாக நிறைவேற்ற முடியாது. தங்களிடம் மிருக பலம் இருக்கிறது என்று ஆட்டம் போட்டவர்களை அடங்கி நிற்க வைத்து வேடிக்கை பார்க்கிறது காலம்.

Leave a Comment